சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாட
பாடல்     பாடக     பாடுவாருக்கு     பாடு     பாடலன்     பாடவல்     பாட்டும்     பாடிய     பாடவம்     பாடகம்     பாட்டியல்     பாடலிபுத்     பாடுந்     பாடும்     பாடி     பாடியஅப்     பாடினார்     பாட     பாடிமிகப்     பாடியவர்     பாடுவார்     பாடினை,     பாடினார்,     பாடினர்,     பாடுகின்ற     பாடகக்     பாடிச்     பாடிப்     பாடம்     பாடுமே,     பாட்டுக்கும்     பாட்டு     பாடுவன்     பாடுமாப்     பாடிற்றிலேன்;     பாடி,     பாடகமும்    
1.006   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.053   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,
நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்
ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

1.075   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.105   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

2.044   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

2.045   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்;
ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக்
காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே.

2.051   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள
நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.058   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்!
ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்!
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்,
நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே.

2.061   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

2.082   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர்
ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

2.095   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

2.107   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து
அரு நட்டம்
ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு
இருள் கண்டத்தர்,
ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ்
மாதோட்டம்,
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர்
வினைதானே.

2.109   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை,
பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை,
தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.

3.003   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

3.027   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

3.073   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

3.086   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-
ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்
சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

3.107   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல்,
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.

3.116   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.

4.004   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

4.025   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.

4.092   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

4.098   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்;
ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.

5.005   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

5.050   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?

5.064   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

5.088   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்!
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

6.004   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல் ஒளி திகழப் பனி வெண்திங்கள்
சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே; தொண்டைவாய் உமை ஓர் பாகம்
கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு பூதம் முழக்க, மாக்கூத்து
ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.005   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

6.005   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

6.034   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும்
நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ? அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.057   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.077   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை   அனல் கண்டேன்; கங்கையாளைக்
கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்;
வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

7.013   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி,
நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர்
வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

7.029   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

7.045   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான்
தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை,
கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.

7.062   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாட்டு அகத்து இசை ஆகி நின்றானை, பத்தர் சித்தம் பரிவு இனியானை,
நாட்டு அகத்தேவர் செய்கை உளானை, நட்டம் ஆடியை, நம் பெருமானை,
காட்டு அகத்து உறு புலி உரியானை, கண் ஓர் மூன்று உடை அண்ணலை, அடியேன்
கோட்டகப் புனல் ஆர் செழுங் கழனிக் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

7.067   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்; பனுவுமா பனுவிப் பரவும் ஆறு அறியேன்;
தேடுமா தேடித் திருத்தும் ஆறு அறியேன்; செல்லுமா செல்லச் செலுத்தும் ஆறு அறியேன்;
கூடும் ஆறு எங்ஙனமோ? என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்து எனை ஆண்டு,
வாடி நீ வாளா வருந்தல்! என்பானை வலி வலம் தனில் வந்து கண்டேனே .

7.091   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்-
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.

7.098   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

8.105.10   8 st/nd Thirumurai   Song # 100   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன்
கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம்
வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

8.106   8 st/nd Thirumurai   Song # 45   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.

8.128   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

9.019   9 st/nd Thirumurai   Song # 8   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும்
   பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத்
   தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர்
   நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின்
   ஆடரங்கே.

10.100   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

10.102   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 3,

11.006   11 st/nd Thirumurai   Song # 90   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

11.008   11 st/nd Thirumurai   Song # 80   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்

11.008   11 st/nd Thirumurai   Song # 139   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்

11.008   11 st/nd Thirumurai   Song # 142   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய

11.034   11 st/nd Thirumurai   Song # 80   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.
12.210   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பாடலிபுத் திரமென்னும்
பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர்
மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறியிதுவே
எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக்
குறிபலவுங் கொளுவினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 282   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர்
தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 168   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 360   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 403   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 441   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடும் அப்பதி பணிந்துபோய்ப்
பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறைமறை வேந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 582   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
12.280   12 st/nd Thirumurai   Song # 664   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 996   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 174   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 193   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாட இசையும் பணியினால்
பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 205   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 289   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 171   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list