சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாத
பாதம்     பாத     பாதாதி     பாதம்பர     பாதி     பாதாளீச்     பாதத்து     பாதத்     பாதியில்     பாதங்கள்     பாதித்     பாதத்தால்     பாதாளம்    
1.046   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

2.025   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே,
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு
இடம்
தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம்
கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.

3.085   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.

3.112   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

3.115   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.

3.119   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

3.901   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

4.042   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

5.029   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.

6.002   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

6.026   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை, பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை, சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை,  -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

6.033   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை, பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,
வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

6.034   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார் அகத்தே பரஞ்சுடர் ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான் உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ? விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.035   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ்   உருவப் பாய்ந்த பாதர்;
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய் நின்ற ஏகபாதர்;
ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய(ப்)பின்,
வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.

6.089   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்;
பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர்   போலும்;
வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

7.001   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7.020   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .

8.107   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

10.304   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

11.006   11 st/nd Thirumurai   Song # 19   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பாதம் புவனி சுடர்நய னம்பவ
னமுயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந்
தோற்பது பூங்கொடியே.

11.008   11 st/nd Thirumurai   Song # 186   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த

11.029   11 st/nd Thirumurai   Song # 100   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பாதம் பரவியொர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.

12.150   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.
12.290   12 st/nd Thirumurai   Song # 339   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 120   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list