சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பார்
பார்     பார்த்தவன்,     பார்க்கலு     பார்ப்பதி     பார்த்திடம்     பார்க்கின்ற     பார்த்திட்டு     பார்ப்பான்     பார்கால்வான்     பார்த்துப்     பார்மேவு     பார்மண்     பார்மிசை     பார்நனைய     பார்த்திருந்து     பார்த்தனுக்கு     பார்த்தனோடு     பார்த்தானை,     பார்,    
1.037   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;
போர்த்தவன், போதகத்தின் உரிவை;
ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று
சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

1.129   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன்  பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு   எய்தும் கழுமலமே.

2.012   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.

3.054   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!

3.056   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், பெருமான், இது கா! எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!

3.061   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

3.069   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.

3.102   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.

4.021   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!

4.023   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
மூர்த்தியே என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன் என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!

4.032   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல
தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே.

4.056   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

4.063   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.

4.068   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்-
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.

4.082   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?

4.089   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

5.018   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் அணங்கி வணங்கிப் பணி செய
நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

5.069   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!

5.086   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே,
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!

6.018   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட
பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன
திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன்
உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.063   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்   தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

6.065   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான் காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற
சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும் செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும்
பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.

6.086   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம் பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து
ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை; வாட்போக்கி அம்மானை; எம்மான்! என்று
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை   செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

6.087   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்; பயிர் வளர்க்கும் துளி அவன் காண்; துளியில் நின்ற
நீர் அவன் காண்; நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்; நில வேந்தர் பரிசு ஆக நினைவு உற்று ஓங்கும்
பேரவன் காண்; பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது, பலநாளும் வழிபட்டு, ஏத்தும்
சீரவன் காண்; சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

7.021   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச்
சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை
ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .

7.032   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.

7.071   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர்
நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.

7.086   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை,
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல்,
ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.

7.089   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத்
தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய
கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே? என்ன,
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்; என்றானே!

7.090   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்;
ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்;
ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!

8.111   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பார் பாடும், | பாதாளர் | பாடும், விண்ணோர் | தம் பாடும்,
ஆர் பாடும், | சாரா | வகை அருளி, | ஆண்டுகொண்ட
நேர் பாடல் | பாடி, | நினைப்பு அரிய | தனிப் பெரியோன்
சீர் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.114   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி உந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

8.122   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய், முளைத்துப் படர்ந்தது ஓர் படர் ஒளிப்பரப்பே!
நீர் உறு தீயே! நினைவதேல், அரிய நின்மலா! நின் அருள் வெள்ளச்
சீர் உறு, சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆர் உறவு எனக்கு, இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!

8.144   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;
சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.

10.315   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே. 

10.404   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

10.404   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

10.409   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

10.721   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

10.721   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.

10.924   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

11.022   11 st/nd Thirumurai   Song # 79   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
பார்கால்வான் நீர்தீப்ப பகலோன் பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

11.023   11 st/nd Thirumurai   Song # 29   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.

11.023   11 st/nd Thirumurai   Song # 53   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேரவரு வார்.

11.034   11 st/nd Thirumurai   Song # 1   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.

12.110   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து
12.410   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
பார்நனைய மதம்பொழிந்து
பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும்
புடையினம்என் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச்
சுடரும்நெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா
களிற்றுநிரைக் களமெல்லாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list