சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பிறையும்
பிறையும்    
1.028   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.033   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

1.067   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

1.087   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

2.005   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.

5.029   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 23   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list