சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பூ
பூண்     பூவினில்     பூண்ட     பூஆர்     பூ     பூதமும்     பூத்     பூவும்     பூதம்     பூந்தராய்ப்     பூசுரர்     பூமகள்     பூமேவு     பூவின்     பூவுடன்     பூட்டொத்து     பூரண     பூசு     பூரித்த     பூசனை     பூசிக்கும்     பூசனைக்     பூரணந்     பூவினிற்     பூசித்தல்     பூதி     பூதங்கள்     பூரணி     பூதாண்டம்     பூதல     பூதக்கண்     பூணாக     பூதப்     பூமங்கை,     பூமாண்     பூங்கச்சி     பூமேல்     பூங்கொத்     பூந்தண்     பூதிப்     பூச     பூவைக்குப்     பூந்தராய்     பூத்த     பூம்பயலை     பூந்துகிலைப்     பூங்குழலார்     பூவார்     பூத     பூம     பூமகளுக்     பூணுந்     பூவிற்     பூமுகை     பூதகண     பூமருவும்     பூழியர்     பூதிமெய்க்     பூழியன்     பூவிரியுந்     பூந்துருத்தி     பூவலர்     பூங்கோயில்     பூமலி     பூசை     பூசுர     பூசுரர்சூ     பூசம்     பூவினானொடு     பூதமொடு     பூம்     பூமகன்     பூதத்தின்     பூவினானும்,     பூசும்     பூங்     பூமகற்கும்     பூதபதி     பூமகனும்(ம்),     பூங்கொடி     பூண்டது     பூவை     பூவினுக்கு     பூங்கழல்     பூத்தன,     பூந்தார்     பூக்கும்     பூதநாதனை,     பூத்து     பூமேலானும்     பூண்,     பூங்கொத்து     பூவனூர்ப்     பூவனூர்,     பூரியா     பூக்     பூதப்படை     பூதியனை,     பூச்     பூளை     பூண்பது     பூவில்     பூவலம்     பூசுவதும்     பூதங்கள்தோறும்     பூங்கனை     பூங்கணை     பூங்கயி     பூண்பதென்     பூங்குவ     பூத்திரள்     பூவணம்    
Search limited to first 100
1.006   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.018   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!

1.023   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

1.024   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

1.032   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

1.039   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

1.054   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

1.056   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,
ஓ! என் சிந்தை ஒருவரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

1.069   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் பொய்கை அலர் தாமரை, செங்கழுநீர், புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற,
கூ ஆர் குயில்கள், ஆலும் மயில்கள், இன்சொல் கிளிப்பிள்ளை,
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தைக் காரோணத்தாரே.

1.096   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!

1.123   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

1.127   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.

1.129   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா
வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள்
கொண்டு அணிந்து, பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து
நின்று, ஏத்தும் கழுமலமே.

1.131   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்,
ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத்
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

2.002   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

2.003   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

2.027   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவினானொடு மாலும் போற்றுஉறும்
தேவன் இந்திர நீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரைத் தம் வினை
கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.

2.032   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

2.062   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்;
நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி,
ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி,
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.

2.066   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

2.068   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

2.074   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

2.107   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து
எழுந்து ஓடி,
மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என்
ஆகும்?
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர்
மன்னி,
தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த
எம்பெருமானே!

2.108   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம்
ஆர்ந்த
பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு
விடம் உண்டார்,
வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை
கெடும் ஆறே?

2.113   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள் தனை
மேவினானும், வியந்து ஏத்த, நீண்டு ஆர் அழல் ஆய்
நிறைந்து
ஓவி, அங்கே அவர்க்கு அருள் புரிந்த(வ்) ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மடமங்கையர் சேர் கடல் காழியே.

2.115   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
அடியார்கள்தாம்,
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம்
கொள்ளவே.

2.117   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசும் மாசு இல் பொடியான், விடையான், பொருப்பன்மகள்
கூச ஆனை உரித்த பெருமான், குறைவெண்மதி
ஈசன், எங்கள்(ள்) இறைவன், இடம்போல் இரும்பைதனுள்,
மாசு இலோர் கள்மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

3.005   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

3.005   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய்
நாதன், சேவடி நாளும் நவின்றிட,
நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.

3.007   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.

3.015   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!

3.021   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே.

3.039   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.040   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே.

3.070   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவர
மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே.

3.078   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய்,
தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.

3.080   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.

3.107   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும்,
ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும்,
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே.

3.122   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

4.002   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

4.005   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூவை ஆய்த் தலை பறித்து, பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே,-பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே!

4.010   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.

4.011   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!

4.020   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?-
ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல-
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே!

4.038   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

4.044   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!

4.051   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!

4.064   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.081   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?

4.089   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.

4.102   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!

5.009   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

5.010   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

5.017   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

5.018   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூ மென்கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.

5.022   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

5.022   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

5.036   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,
ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்-
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்;
மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.

5.048   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

5.053   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால்,
பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

5.054   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்-
வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.

5.065   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

5.065   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்,
கோவலூர், குடவாயில், கொடுமுடி,
மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!

5.077   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

5.090   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

5.096   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

6.010   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்;
  புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்;
வேதத்தொழிலார் விரும்ப நின்றார்;
  விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி,
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்;
  உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.011   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூண் அலாப் பூணானை, பூசாச் சாந்தம் உடையானை, முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை, ஒருவர் காணா   உத்தமனை, ஒளி திகழும் மேனியானை,
சேண் உலாம் செழும் பவளக்குன்று ஒப்பானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீண் உலாம் மலர்க் கழனி நீடூரானை,-நீதனேன்   என்னே நான் நினையா ஆறே!.

6.015   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;   பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6.020   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை,   புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை,
மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை,   மறைக்காடும் வலி வலமும் மன்னினானை,
தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை,   உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை,
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

6.032   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி!
புத்தேளிர்   போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6.051   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்; சங்கரர்; வெண்குழை ஓர் காதர்;
கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை வீரட்டத்தார்;
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி மேய மணவாள(ன்)னார்;
வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே.

6.069   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதியனை, பொன்வரையே போல்வான் தன்னை, புரி சடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை,
வேதியனை, வெண்காடு மேயான் தன்னை, வெள் ஏற்றின் மேலானை, விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை, ஆதிரை நன்நாளான் தன்னை, அம்மானை, மைம்மேவு கண்ணியாள் ஓர்-
பாதியனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.075   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூச் சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார்; புறம் பயத்தார்; அறம் புரி பூந்துருத்தி புக்கு,
மாச் சூழ்ந்த பழனத்தார்; நெய்த்தானத்தார்; மா தவத்து வளர் சோற்றுத்துறையார்; நல்ல
தீச் சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து, திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அந் நாள்
கோச் சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

7.015   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,
நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

7.040   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை, புனல் ஆகி, அனல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய்,
நாளை இன்று நெருநல் ஆய், ஆகாயம் ஆகி, நாயிறு ஆய், மதியம் ஆய், நின்ற    எம்பரனை,
பாளை படு பைங்கமுகின் சூழல், இளந் தெங்கின் படு மதம் செய் கொழுந் தேறல் வாய்  மடுத்துப் பருகி,
காளை வண்டு பாட, மயில் ஆலும் வளர் சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு     தொழுதேனே .

7.046   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு,  எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி   வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை   பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி      இருந்தீரே! .

7.068   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பூவில் வாசத்தை, பொன்னினை, மணியை, புவியை, காற்றினை, புனல், அனல், வெளியை,
சேவின் மேல் வரும் செல்வனை, சிவனை, தேவ தேவனை, தித்திக்கும் தேனை,
காவி அம் கண்ணி பங்கனை, கங்கைச் சடையனை, காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

7.082   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல் அரியும்,
கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்-
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச் சுழியல்,
மா ஏந்திய கரத்தான், எம சிரத்தான் தனது அடியே.

8.102   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,
நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;
விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,

8.109   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும்,
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்;
கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன்,
தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

8.110   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும்,
மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.110   8 st/nd Thirumurai   Song # 20   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.112   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

8.115   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

8.120   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

8.130   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்,
நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்
பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,
காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

8.131   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி,
பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை,
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!

8.139   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே,
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ,
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின்
பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!

8.143   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்,
மாது நல்லாள், உமை மங்கை, பங்கன், வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன்,
ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே.

8.145   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,
ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;
போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.

8.202   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பூங்கனை யார்புனற் றென்புலி
   யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
   பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
   கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
   பாவையை யெய்துதற்கே.

8.214   8 st/nd Thirumurai   Song # 32   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பூங்கணை வேளைப் பொடியாய்
   விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
   விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
   கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
   ரோசென் றகன்றவரே.

8.216   8 st/nd Thirumurai   Song # 52   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பூங்கயி லாயப் பொருப்பன்
   திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
   திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
   மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
   திண்டிற லாண்டகையே.
8.218   8 st/nd Thirumurai   Song # 31   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பூரண பொற்குடம் வைக்க
   மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
   ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
   லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
   றேங்கும் மணமுரசே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list