சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பூத
பூதமும்     பூத்     பூதம்     பூதி     பூதங்கள்     பூதாண்டம்     பூதல     பூதக்கண்     பூதப்     பூதிப்     பூத்த     பூத     பூதகண     பூதிமெய்க்     பூதமொடு     பூதத்தின்     பூதபதி     பூத்தன,     பூதநாதனை,     பூத்து     பூதப்படை     பூதியனை,     பூதங்கள்தோறும்     பூத்திரள்    
1.039   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

1.054   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

1.057   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

2.032   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

2.081   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

2.108   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம்
ஆர்ந்த
பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு
விடம் உண்டார்,
வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை
கெடும் ஆறே?

3.005   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய்
நாதன், சேவடி நாளும் நவின்றிட,
நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.

3.015   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!

3.080   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.

4.038   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

4.044   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!

4.064   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.081   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?

5.017   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

5.022   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

5.096   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

6.010   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்;
  புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்;
வேதத்தொழிலார் விரும்ப நின்றார்;
  விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி,
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்;
  உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.015   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;   பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6.051   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்; சங்கரர்; வெண்குழை ஓர் காதர்;
கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை வீரட்டத்தார்;
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி மேய மணவாள(ன்)னார்;
வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே.

6.069   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூதியனை, பொன்வரையே போல்வான் தன்னை, புரி சடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை,
வேதியனை, வெண்காடு மேயான் தன்னை, வெள் ஏற்றின் மேலானை, விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை, ஆதிரை நன்நாளான் தன்னை, அம்மானை, மைம்மேவு கண்ணியாள் ஓர்-
பாதியனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

8.115   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

8.120   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

8.131   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி,
பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை,
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!

9.008   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
   புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
   தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
   நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

10.609   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

10.803   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

10.911   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

10.911   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.

10.913   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே. 14,

10.928   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

11.006   11 st/nd Thirumurai   Song # 48   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.

11.033   11 st/nd Thirumurai   Song # 31   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பூதிப் புயத்தர் புயத்தில்
சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் கேட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்னெனும் வேதியனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 103   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த

12.000   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 125   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.
12.000   12 st/nd Thirumurai   Song # 131   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 66   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பூதி யாகிய புனிதநீ றாடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செய்
அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பூத கணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்தேத்த
விமல மூர்த்தி திருவுள்ளம்
காதல் கூர வெளிப்படலும்
கண்டு தொழுது மனங்களித்துப்
பாத மலர்கள் மேல்விழுந்தார்
பத்தி முதிர்ந்த பாலகனார்.
12.220   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பூதி கோவணம் சாதனத் தாற்பொலிந்
தாதி தேவர்தம் அஞ்செழுத் தாமவை
ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.

12.260   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
12.280   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 858   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பூதிமெய்க் கணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி
யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய
அமணிருள் மாய்ந்த தன்றே.
12.290   12 st/nd Thirumurai   Song # 310   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பூத முதல்வர் புற்றிடங்கொண்
டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக்
கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச்
செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
12.360   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list