சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பேசு
பேசுவ     பேசும்     பேசுபதப்     பேசு     பேசுக     பேசுந்    
8.148   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த
மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி,
பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து.

11.006   11 st/nd Thirumurai   Song # 97   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பேசுவ தெல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுவறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவையொன்றும் பொய்யலவே.

11.009   11 st/nd Thirumurai   Song # 28   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானா ளேபாவம் மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.

11.016   11 st/nd Thirumurai   Song # 41   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால்

11.026   11 st/nd Thirumurai   Song # 28   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்
கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலுந் தேரின்
நீயுமஃ தறிதி யன்றே மாயப்

பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மயர் இழிவு சார்ந்தனை நீயும்
நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை
நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்தழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெவு சிறையறைக் குறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்றென இரங்கி

மறவா மனத்து மாசறும் அடியார்க்
கருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்று ளாடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

11.029   11 st/nd Thirumurai   Song # 23   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பேசுக யாவர் உமைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லார்க்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.

11.033   11 st/nd Thirumurai   Song # 7   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பேசும் பெருமையவ் வாரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவ னீசனுக்கே
நேச னெனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 41   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list