சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பேர்
பேர்கொண்ட     பேர்பெற்     பேர்பரவை     பேர்     பேர்த்து    
3.004   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

3.058   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே?
கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா
ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!

4.041   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே!
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.

4.058   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

6.054   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

7.051   7 st/nd Thirumurai   Song # 12   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம்
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி
ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில்
ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.

7.056   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பேர் ஓர் ஆயிரமும்(ம்) உடையானை, பேசினால் பெரிதும்(ம்) இனியானை,
நீர் ஊர் வார் சடை நின்மலன் தன்னை, நீடூர் நின்று உகந்திட்ட பிரானை,
ஆரூரன்(ன்) அடி காண்பதற்கு அன்பு ஆய் ஆதரித்து அழைத்திட்ட இம் மாலை
பார் ஊரும் பரவித் தொழ வல்லார், பத்தராய் முத்தி தாம் பெறுவாரே.

8.113   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!

10.219   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 281   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள்
திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட
என்னாசை யெழுபரவை.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list