சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பை
பை     பைம்     பைவாய்     பைந்தொடி     பைந்நாகம்     பைஞ்ஞீ     பையரவ     பைத்த     பைங்கோட்டு     பைங்கணது     பைங்     பைங்கண்     பைம்பொனே!     பைக்கையும்     பைதல்பிணக்குழைக்     பைங்கால்-தவளை     பைந்தளிர்க்     பைந்     பைந்நா     பைவா    
1.025   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

1.042   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

1.055   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா! நின் அடியார்களே.

1.064   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,
மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.

1.103   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை
மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த
கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

3.002   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

3.030   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.063   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.

3.064   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.

3.085   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.

3.092   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும்
காணாது
அங்கணா! அருள்! என அவர் அவர் முறைமுறை
இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

3.104   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத்
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன்
பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த,
ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே.

3.112   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

4.004   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.022   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி,
செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே!

4.063   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

4.084   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

4.088   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே
வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும்
மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.

4.100   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.

4.104   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.

5.096   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-
மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

6.016   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்;
படைக்கணாள் பாகம் உடையார் போலும்;
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்;
அணி நீலகண்டம் உடையார் போலும்;
வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என்
உள்ளத்து இருந்தார் போலும்;
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

6.029   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை, நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை, செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது   அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.099   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்!
பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்!
மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்-
ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்;
அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை;
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்-
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.010   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பைத்த படத்தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம்; பயிலப் புகுவார்
சித்தம் ஒரு நெறி வைத்த இடம்; திகழ்கின்ற இடம்; திருவான் அடிக்கே
வைத்த மனத்தவர், பத்தர், மனம் கொள வைத்த இடம்; மழுவாள் உடைய
அத்தன் இடம்(ம்); அழல்வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.

8.107   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.134   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என்
மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா!
செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!
எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே?

8.210   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பைந்நா ணரவன் படுகடல்
   வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
   புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
   அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
   லாட்கென்க ணின்னருளே.

8.214   8 st/nd Thirumurai   Song # 22   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பைவா யரவரை அம்பலத்
   தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
   தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
   யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
   தென்றுமென் இன்னுயிரே.

8.214   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பைவா யரவும் மறியும்
   மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
   தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
   சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
   நீண்முத்த மாலைகளே.

10.407   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்த துலகே.

11.008   11 st/nd Thirumurai   Song # 31   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக

12.210   12 st/nd Thirumurai   Song # 310   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.
12.470   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
பையரவ மணியாரம்
அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்
அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார்
கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர்
திருத்தொண்டு விரித்துரைப்பாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list