சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொருத
பொருத     பொருது     பொருத்தம்     பொருத்திய    
2.004   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?

3.005   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து,
இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ,
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்தும் மான்மறி எம் இறையே.

4.031   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா
ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

4.042   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

6.012   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

8.105.10   8 st/nd Thirumurai   Song # 93   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத' என்று எனைப் புரிந்து நோக்கவும்,
வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே,
அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை
இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே?

11.010   11 st/nd Thirumurai   Song # 58   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list