சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் போக
போகம்     போக்கும்     போகின்ற     போகத்துள்     போகமும்     போகத்தை     போகம்செய்     போகபந்     போக    
1.049   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

2.017   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
ஆகம் அறியா அடியார் இறைஊர்
மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல்
மீ கம் அறிவார், வேணுபுரமே.

2.069   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர்
தங்கள்
ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர்
கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.

4.066   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்;
வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப்
பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்;
நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

4.087   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

8.105.08   8 st/nd Thirumurai   Song # 72   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
போகம் வேண்டி வேண்டி லேன் புரந்த ராதி இன்பமும்
ஏக நின் கழல் இணை யலா திலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே

10.209   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

10.214   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. 

10.221   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 22,

10.319   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே. 

10.405   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

10.702   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

10.738   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

10.924   10 st/nd Thirumurai   Song # 58   திருமூலர்   திருமந்திரம்  
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 75   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.

11.020   11 st/nd Thirumurai   Song # 10   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.

12.000   12 st/nd Thirumurai   Song # 233   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
போக நீடுநிதி மன்னவன் மன்னும்
புரங்க ளொப்பன வரம்பில வோங்கி
மாக முன்பருகு கின்றன போலும்
மாளி கைக்குல மிடைந்த  பதாகை
யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும்
ஓம தூமமுயர் வானி லடுப்ப
மேக பந்திகளின் மீதிடை எங்கும்
மின்னு  டங்குவன வென்ன விளங்கும்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list