சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் போத
போது     போதியாரும்     போதும்     போதியர்     போதந்     போதிரண்     போதுகந்     போதறி     போதெலாம்     போதரங்க     போதுவர்     போதரா     போதம்     போத     போதியார்,     போதியர்கள்     போதின்     போதினாலும்     போதகத்து     போதி     போதியர்,     போதை     போதன்,     போதியர்கள்,     போதகம்     போதோ    
1.056   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது பொன் திகழ் கொன்றை புனை முடி
நாதர் வந்து, என் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

1.066   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகு ஆரும்
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குட மூக்கில்
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்,
காது ஆர் குழையர், காளகண்டர் காரோணத்தாரே.

1.099   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ,
கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

1.107   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.

2.004   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?

2.012   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.

2.045   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்;
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும்
காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே.

2.048   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

2.057   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக்
காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.

2.121   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள்
ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை
ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?

3.005   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால்,
அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.

3.011   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.

3.015   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.

3.024   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!

3.029   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.

3.049   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

3.075   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு, பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே!

3.084   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

3.087   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இளவனமுலை செறிதலின்,
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,
மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

3.087   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,
தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

3.111   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.

5.024   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்-
மாது தாழ்சடை வைத்த மணாளனார்;
ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

5.030   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

8.123   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக்
கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க' என்று, நின் தொண்டரில்கூட்டாய்;
யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ?
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

8.201   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
போதோ விசும்போ புனலோ
   பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
   மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
   விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
   நின்றவர் வாழ்பதியே.

8.223   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
போது குலாய புனைமுடி
   வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
   றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
   லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
   றொன்னா ரிடுமதிலே.

10.104   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.5,

10.114   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 

10.310   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

10.702   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.

10.737   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

10.806   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.

10.819   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

10.904   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

10.924   10 st/nd Thirumurai   Song # 63   திருமூலர்   திருமந்திரம்  
போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

11.009   11 st/nd Thirumurai   Song # 79   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
போது நெறியனவே பேசி நின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா.

11.011   11 st/nd Thirumurai   Song # 5   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.

11.022   11 st/nd Thirumurai   Song # 89   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதங்க நீர்கரந்த புண்ணியற்குப் போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

11.027   11 st/nd Thirumurai   Song # 12   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேஇணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.

12.100   12 st/nd Thirumurai   Song # 112   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
போதுவர் மீண்டு செல்வர்
புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர்  
கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய  
நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
கொண்டிங்கு வருவே னென்பார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
போதரா நின்ற போது
புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
போவதங் கினிஏன் என்று.
12.210   12 st/nd Thirumurai   Song # 277   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.
12.260   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 209   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.
12.280   12 st/nd Thirumurai   Song # 952   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
போத நீடுமா மறையவர்
எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின்
றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ
யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list