சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மங்கை
மங்கை     மங்கையும்     மங்கைகொங்     மங்கையர்கள்     மங்கையைப்     மங்கையோ     மங்கையர்க்     மங்கையர்க்குத்     மங்கையர்க்கு    
1.065   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.092   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்!
கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!

1.104   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

2.045   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான்,
அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு
உகந்தான்,
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல்
கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே.

2.050   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!

2.080   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே

2.096   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்! என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு
ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து, தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன்நகரே.

2.112   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை கூறினன், மான்மறி உடை
அம் கையான், உறை ஆடானை
தம் கையால் தொழுது, ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே.

3.120   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

3.902   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு ரைத்த கிளியன்ன வூரனே.

5.015   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மங்கை காணக் கொடார், மணமாலையை;
கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை;
நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?

7.025   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்;
திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே,
அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

7.068   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மங்கை பங்கனை, மாசு இலா மணியை, வான நாடனை, ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பு அரியானை, ஏழையேற்கு எளி வந்த பிரானை,
அங்கம் நால்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும்
நங்கள் கோனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

7.074   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன்,   ஆரூரன்-
கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல்
தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம்   ஆள்பவரே .

9.013   9 st/nd Thirumurai   Song # 11   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே. .
10.408   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

11.006   11 st/nd Thirumurai   Song # 32   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 42   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய

11.008   11 st/nd Thirumurai   Song # 100   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய

11.037   11 st/nd Thirumurai   Song # 48   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய

11.038   11 st/nd Thirumurai   Song # 34   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
மங்கை யிடத்தர னைக்கவி
  நீரெதிர் ஓட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
  நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
  சூழ்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி ஏரிடை
  யாள்குடி கொண்டனள் எம்மனமே. 15
  பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.050   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மங்கை யர்க்குவாள் விழியிணை
தோற்றமான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கிடை
மலர்க்கொடி யெங்கும்
அங்கண் முல்லையின் தெய்வமென்
றருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால்தொழும் சிவன்மகிழ்
திருமுல்லை வாயில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 645   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கையர்க் கரசி யார்பால்
வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம்
குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய
ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம்
எனஎதிர் கொள்ளும் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 973   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கை பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும்
திருவோத் தூரைச் சேர்வுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 232   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கை யொருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும்
காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தந் தீருமென.
12.660   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
12.720   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மங்கை பாகர்தந் திருமுன்பு
சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநா
யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமைநீ
எய்திய தென்னென அருள்செய்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list