சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மண்
மண்ணோர்களும்     மண்     மண்தான்     மண்ணுதல்     மண்,     மண்டையின்,     மண்ணளந்     மண்ணகத்     மண்ணொன்று     மண்மலை     மண்டலம்     மண்டலத்     மண்ணில்     மண்ணை     மண்ணினில்     மண்டல     மண்ணிற்     மண்யொப்     மண்டும்     மண்டுபுனல்     மண்டியபே     மண்டு     மண்ணின்மிசை     மண்ணிக்     மண்முதலாம்     மண்ணுலகில்     மண்ணினிற்     மண்ணுலகு     மண்ணின்     மண்ணில்நல்ல     மண்ணி     மண்ணிய     மண்ணினுக்     மண்ணிறைந்த     மண்மேற்     மண்ணுக்     மண்ணினை,     மண்ணினை     மண்ணொடு,     மண்ணும்     மண்டை     மண்ணர்;     மண்ணவர்     மண்ணர்,     மண்ணும்,     மண்ணகத்திலும்     மண்ணினார்     மண்ணுளே     மண்டி     மண்ணிப்     மண்ணைத்     மண்ணுலகும்     மண்ணோடு    
1.009   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

1.039   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

1.059   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.

1.066   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

1.111   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;
எண்ணியகால், அவை இன்பம் அல்ல;
ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த
கண்ணுதல் வள நகர் கடைமுடியே.

1.112   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண், புனல், அனலொடு, மாருதமும்,
விண், புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.

1.112   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்டையின், குண்டிகை, மாசு தரும்,
மிண்டரை விலக்கிய விமலன் நகர்-
பண்டு அமர்தரு பழங்காவிரியின்
தெண்திரை பொருது எழு சிவபுரமே.

2.004   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

2.014   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

2.041   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

2.045   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும்,
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்;
பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல்
கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே.

2.048   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

2.054   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

2.067   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

2.089   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே.

2.094   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை மேனி
வன்சமணர்,
குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து,
எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.

2.106   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு;
ஒருபாகம்
பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்;
பெருங்கடல் பவளம் போல்
வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம்
புக்க
எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி
தொழுவாரே.

2.117   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

3.015   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.

3.017   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே.

3.020   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே.

3.024   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

3.030   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்
விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள
பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும்
பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.036   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர்
வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே!

3.044   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!

3.047   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?

3.080   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.

3.080   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.

3.109   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

3.118   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
எனல் ஆமே.

3.120   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

4.012   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?

4.023   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்;
திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!

4.031   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.

4.039   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!

4.043   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

4.070   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்;
புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை

4.071   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

4.093   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?


4.094   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

5.015   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி;
விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி;
மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.

5.037   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் உளாரை மயக்கு உறும் ஆனையார்;
எண் உளார் பலர் ஏத்திடும் ஆனையார்;
விண் உளார் பலரும்(ம்) அறி ஆனையார்;
கண்ணுள் ஆனைகண்டீர்-கடவூரரே.

6.005   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

6.045   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை; கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே!.

6.058   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

6.059   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்; பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;
கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை   தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;
விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6.060   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை;
விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை, தாரகைகள் தம்மில்; மிக்க
எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்-
கண்ணவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.

6.070   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,   வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

6.077   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்;
விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம் பல ஆம் சரிதை கண்டேன்;
நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை அங்கம் ஓதக் கண்டேன்;
வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்-   வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

6.094   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே ஆகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி,   கலை ஞானம் தானே ஆகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.

7.028   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண், நீர், தீ, வெளி, கால், வரு பூதங்கள் ஆகி, மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய், பிறவா உரு ஆனவனே!
கண் ஆரும் மணியே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அண்ணா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.046   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை,   சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ?      இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்;   நாளை,
கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம்     மேவி இருந்தீரே! .

7.070   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7.083   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்
அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-
திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-
எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?

7.087   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல்,
பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர்,
வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ-
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.

7.100   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்;
விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.

7.102   7 st/nd Thirumurai   Song # 10      
மண் தலத்து(து) அமணர் பொய்யும், தேரர்கள் பொழியும், மாறக்
கண்டனை; அடிகள்! என்றும் கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத் தன்மை யாலே
எண்திசைக்கு(கு) அறிய வைத்தாய், இக்கதவு(வு) அடைப்பித்து(து) அன்றே!

8.103   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!

8.149   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே?
வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே?
காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே?
பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே?
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே?
எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!

8.151   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை,
எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன்
சுண்ண வெண் நீறு அணிவித்து, தூ நெறியே சேரும்வண்ணம்,
அண்ணல் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

9.005   9 st/nd Thirumurai   Song # 3   சேந்தனார்   திருவிசைப்பா  
மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
   மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
   கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
   திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
   குறுகவல் வினைகுறு காவே. 

9.021   9 st/nd Thirumurai   Song # 7   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு
   வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான்
   மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து
   விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

10.101   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 

10.105   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

10.212   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 13,

10.217   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 18,

10.309   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

10.318   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 19,

10.413   10 st/nd Thirumurai   Song # 67   திருமூலர்   திருமந்திரம்  
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 88   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

10.722   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

10.725   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

10.803   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 48   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

10.928   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

11.032   11 st/nd Thirumurai   Song # 15   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
மண்யொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்
தணியொப் பனவவன் தன்முடி
மேலடி யேனிடர்க்குத்
துணியச் சமைத்தநல் ஈர்வா
ளனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை யம்பலத்
தான்தன் திருந்தடியே.

11.033   11 st/nd Thirumurai   Song # 22   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
மண்டும் புனற்சடை யாந்தமர்
தூசெற்றி வாட்டுவகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவனென்னா
முண்டம் படர்பாறை முட்டு
மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா
லியர்தங்கள் தொல்குலமே.

11.034   11 st/nd Thirumurai   Song # 98   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மண்டுபுனல் பரந்தவயல்
வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக்
களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம்
இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழலசைய
மடநடையின் வரம்பணைவார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 246   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மண்டியபே ரன்பினால்
வன்றொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்டிரைவே லையின்மிதந்த
திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில்
வீற்றிருந்த படியென்று
பண்டருமின் னிசைபயின்ற 
திருப்பதிகம் பாடினார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
12.190   12 st/nd Thirumurai   Song # 112   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மண்ணின்மிசை வந்ததற்பின்
மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவிப்பார்
புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத்
தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித் திலநீர் மருதத்தண்
டலைசூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச்
சமிதை யுடன்மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன்புகுதும்
நன்னாள் பலவாம் அந்நாளில்.
12.210   12 st/nd Thirumurai   Song # 427   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மண்முதலாம் உலகேத்த
மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த
ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ்
ஆண்டஅர சமர்ந்திருந்தார்.

12.230   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 77   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 237   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 256   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.
12.280   12 st/nd Thirumurai   Song # 562   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 881   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1087   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1098   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.
12.280   12 st/nd Thirumurai   Song # 1221   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.
12.290   12 st/nd Thirumurai   Song # 266   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மண்டு போரின் மலைப்பவர்
துண்ட மாயிட வுற்றுஎதிர்
கண்ட ராவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.
12.410   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மண்ணுக் குயிராம் எனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
12.720   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மண்ணில் உள்ளார் அதிசயித்தார்
மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார்
வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி
அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங்
கொண்டு பணிந்தார் காசினிமேல்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list