சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மண்ணி
மண்ணில்     மண்ணினில்     மண்ணிற்     மண்ணின்மிசை     மண்ணிக்     மண்ணினிற்     மண்ணின்     மண்ணில்நல்ல     மண்ணி     மண்ணிய     மண்ணினுக்     மண்ணிறைந்த     மண்ணினை,     மண்ணினை     மண்ணினார்     மண்ணிப்    
2.004   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

2.014   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

2.045   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும்,
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்;
பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல்
கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே.

3.017   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே.

3.024   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

3.044   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!

3.080   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.

3.118   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
எனல் ஆமே.

4.043   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

6.070   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,   வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

7.070   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7.083   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்
அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-
திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-
எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?

8.103   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!

8.149   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே?
வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே?
காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே?
பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே?
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே?
எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!

10.413   10 st/nd Thirumurai   Song # 88   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

10.803   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

10.928   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

11.034   11 st/nd Thirumurai   Song # 98   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

12.190   12 st/nd Thirumurai   Song # 112   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மண்ணின்மிசை வந்ததற்பின்
மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவிப்பார்
புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத்
தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித் திலநீர் மருதத்தண்
டலைசூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச்
சமிதை யுடன்மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன்புகுதும்
நன்னாள் பலவாம் அந்நாளில்.
12.230   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 237   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 562   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 881   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1087   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1098   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.
12.280   12 st/nd Thirumurai   Song # 1221   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.
12.290   12 st/nd Thirumurai   Song # 266   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மண்ணில் உள்ளார் அதிசயித்தார்
மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார்
வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி
அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங்
கொண்டு பணிந்தார் காசினிமேல்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list