சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மதி
மதி     மதியால்     மதிதனில்     மதியமும்     மதிவட்ட     மதியின்     மதித்திடும்     மதிமலி     மதியா     மதிமயங்     மதியாருஞ்     மதிக்க     மதிவி     மதிபு     மதிவாள்     மதிநுதற்     மதியானே!     மதியம்     மதியில்     மதிக்கும்    
1.036   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

1.082   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

2.015   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில்
பதியானே! என்பவர் பாவம் இலாதாரே.

2.085   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

2.121   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்) மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே.

3.041   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே.

4.015   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை,
அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,
விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,
நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.

4.022   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி,
நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த,
மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே!

6.031   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி ஆவது இது கண்டாய்; வானோர்க்கு எல்லாம்
அதிபதியே! ஆரமுதே! ஆதீ! என்றும்; அம்மானே! ஆரூர் எம் ஐயா! என்றும்;
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும் வலம் செய்து தொண்டு பாடி,
கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா! கற்பகமே! என்று என்றே கதறா நில்லே!.

7.102   7 st/nd Thirumurai   Song # 7      
மதி துன்றும் இதழி, மத்தம், மன்னிய சென்னி யானே!
கதி ஒன்றும் ஏற்றி னானே! கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
விதி ஒன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கும் தன்மை
இது அன்றோ, உலகில் நம்பி எம்மை ஆள் உகக்கும் ஆறே!

8.103   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட

8.140   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய,
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப,
கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக் களித்து, இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

10.311   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 70   திருமூலர்   திருமந்திரம்  
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 

10.409   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

11.001   11 st/nd Thirumurai   Song # 1   திரு ஆலவாய் உடையார்   திருமுகப் பாசுரம்  
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

11.004   11 st/nd Thirumurai   Song # 37   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.

11.021   11 st/nd Thirumurai   Song # 12   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே

11.022   11 st/nd Thirumurai   Song # 46   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரைப்பர் என்னும் மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வங் கொண்ட வனப்பு.

11.023   11 st/nd Thirumurai   Song # 38   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
மதியாருஞ் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி
அண்ணா மலைசேர்வ ரால்.

11.034   11 st/nd Thirumurai   Song # 46   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.

12.070   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர்
துதிசெய் தெங்கணும் அதிசய முறவெதிர் தொழுதார்
கதிர்வி சும்பிடைக் கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 379   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 234   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மதிவாள் முடியார் மகிழ்கோயிற்
புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண
மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம்
புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நினைந்து நினைந்தழிய.
12.290   12 st/nd Thirumurai   Song # 359   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org