சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மத்தம்
மத்தம்     மத்தம்மாமலர்     மத்தம்,    
1.015   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.

3.005   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்,
ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும், தானே.

3.080   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.

5.041   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்;
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.

7.013   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி,
முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர்
அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

7.032   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா!
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!

7.036   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும், கங்கையாளொடு திங்களும்,
மொய்த்த வெண்தலை, கொக்கு இற(ஃ)கொடு, வெள் எருக்கம், உம் சடைய தாம்;
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்;
அத்தி ஈர் உரி போர்த்திரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

7.101   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மத்தம் கவரும் மலர்க்கொன்றைமாலை மேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே, பழி? உரையீர்-
முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடிமன்னர்
சித்தம் கவரும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list