சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மந்திரம்
மந்திரம்    
2.003   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

2.066   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

4.028   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே

7.100   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது-
உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.

10.100   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

10.222   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 45   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

10.409   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

10.734   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list