சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மனை
மனையுள்     மனைபுகு     மனையினில்     மனையுறைக்     மனைஆய்     மனைவியார்     மனைவி     மனைசாலும்     மனைமருங்     மனைப்படப்பிற்     மனைவியா     மனையறத்தில்     மனைக்கே     மனைகள்     மனைக்     மனை    
2.059   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்! எனப்
பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

3.088   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி சடையினர்
கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்,
முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார்
வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.

4.012   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்

4.071   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!

6.022   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்,
சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய்   என்று கருதாதே, போத, -நெஞ்சே!-
பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன் பற்றே பற்று ஆகக் காணின் அல்லால்,
கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?.

10.101   10 st/nd Thirumurai   Song # 43   திருமூலர்   திருமந்திரம்  
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே. 

10.112   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே. 

10.315   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே. 

11.007   11 st/nd Thirumurai   Song # 19   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.

11.022   11 st/nd Thirumurai   Song # 39   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன் மனைஆய
என்பாவாய் என்றேனுக் யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.

12.020   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மனைவியார் தம்மைக் கொண்டு
மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மனைவியார் சுற்றத் தாரும்
வள்ளலார் சுற்றத் தாரும்
இனையதொன் றியாரே செய்தார்
இயற்பகை பித்தன் ஆனால்
புனையிழை தன்னைக் கொண்டு
போவதா மொருவ னென்று
துனைபெரும் பழியை மீட்பான்
தொடர்வதற் கெழுந்து சூழ்வார்.
12.040   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மனைவியார் கொழுநர் தந்த
மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
திருவமு தமைத்து நின்று.
12.070   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மனைசாலும் நிலையறத்தின்
வழிவந்த வளம்பெருகும்
வினைசாலும் உழவுதொழில்
மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயல் மயிலனையார்
நடம்புரியப் புகல்முழவங்
கனைசாறு மிடைவீதிக்
கஞ்சாறு விளங்கியதால்.
12.130   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மனைமருங் கடகு மாள
வடநெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க
அமுதுசெய் தன்ப னாரும்
வினைசெயல் முடித்துச் செல்ல
மேவுநா ளொருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு
நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.
12.210   12 st/nd Thirumurai   Song # 174   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு
வழிக்கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்
அம்பலத்து நிருத்த னாரைத்
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ
எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மனைவியார் தாம்படைத்த
மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மனைவியா ருடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித
மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட்
டகன்றிட நீப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list