சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மன்
மன்     மன்னி     மன்னிய     மன்மதன்     மன்றத்தே     மன்மனம்     மன்னும்     மன்னிநின்     மன்று     மன்சத்தி     மன்னா     மன்றங்     மன்னர்     மன்னங்     மன்னிருகால்     மன்னவ     மன்னுயிர்     மன்னவன்தன்     மன்னவர்     மன்பெ     மன்னுசீர்     மன்றுளே     மன்னு     மன்னவன்     மன்னுந்     மன்னுதபோ     மன்னும்பதி     மன்றல்     மன்னுஞ்     மன்னியஅந்     மன்னுகோயிலை     மன்னும்அக்     மன்றலங்     மன்னுதிரு     மன்றல்மலர்ப்     மன்னுதிருப்     மன்னுபுகழ்த்     மன்னுமிசை     மன்னுபெருஞ்     மன்றல்வினைத்     மன்னுதிருக்     மன்ன     மன்னன்     மன்னிப்     மன்னவற்குத்     மன்னவனை     மன்னும்இரா     மன்றில்     மன்னவனார்     மன்னுங்     மன்னவரும்     மன்னவன்பால்     மன்ற     மன்னினார்,     மன்றத்துப்     மன்றியும்     மன்றனை(ம்),     மன்னே!     மன்ன,     மன்னவனே,     மன்செய்த     மன்னுக    
Search limited to first 100
1.016   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

1.055   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே, வினை பாறுமே.

1.096   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

1.123   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

1.124   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.

2.072   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,
முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்,
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

2.078   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;
சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்
சேர்த்தினார்;
மின்னு பொன் புரிநூலினார்; மேயது விள நகர் அதே.

3.072   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.

3.087   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை
புணர்தலின்,
தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,
மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

4.026   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!

4.088   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும்
அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.

4.097   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே.

4.100   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

5.004   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

5.050   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?

5.073   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.

7.001   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7.039   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப்  பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு   நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே .

7.079   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க,
கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய,
என்னைக் கிளி மதியாது என எடுத்துக் கவண் ஒலிப்ப,
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.

8.105.10   8 st/nd Thirumurai   Song # 99   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும்
முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால்
பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே.

8.106   8 st/nd Thirumurai   Song # 43   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.

8.213   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மன்னுந் திருவருந் தும்வரை
   யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
   வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
   சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
   னென்னப் புலம்புவனே.

8.218   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மன்செய்த முன்னாள் மொழிவழியே
   அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
   லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
   யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
   நீர்மைகொல் மொய்குழலே.

8.219   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
   மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
   லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
   தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
   றோர்தெய்வ முன்னலளே.

9.029   9 st/nd Thirumurai   Song # 1   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. 

10.100   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

10.105   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

10.309   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே. 

10.518   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

10.613   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே. 14,

10.814   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

10.815   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே. 16,

10.820   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

10.918   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

10.928   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

11.009   11 st/nd Thirumurai   Song # 51   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயம்பு.

11.021   11 st/nd Thirumurai   Song # 37   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

11.032   11 st/nd Thirumurai   Song # 65   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக் குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.

11.033   11 st/nd Thirumurai   Song # 45   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 5   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.

11.034   11 st/nd Thirumurai   Song # 70   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.

11.037   11 st/nd Thirumurai   Song # 55   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்

12.000   12 st/nd Thirumurai   Song # 105   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவ னதனைக் கேளா
வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான்
அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம்
அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன்
தாளிணை தொழுது சொல்வான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னுயிர் புரந்து வையம்
பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும்
என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத்
தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற
துயரமோர் அளவிற் றன்றால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவன்தன் மைந்தனையங்
கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி
முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா
தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத்
தான்கொண்டு மறுகணைந்தான்.,
12.000   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவர் திருவுந் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள
நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு
தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப்
புரவிமேற் கொண்டு போந்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 230   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின்  மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல  வண்டலர் கைதைத்
துன்று  நீறுபுனை மேனிய வாகித் தூய  
நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன  கண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார். ,
12.000   12 st/nd Thirumurai   Song # 321   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்து மளித்தெதிர் நின்றன.,
12.000   12 st/nd Thirumurai   Song # 329   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னுசீர் வயலாரூர்
மன்னவரை வன்றொண்டர்
சென்னியுற அடிவணங்கித்
திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னமால் அயனறியா
முதல்வர்தா மெழுந்தருள
அந்நிலைகண் டடியவர்பாற்
சார்வதனுக் கணைகின்றார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
12.070   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
12.080   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத்
தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
12.110   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.
12.190   12 st/nd Thirumurai   Song # 77   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும்
தான மன்றியும் தனுவெழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
12.210   12 st/nd Thirumurai   Song # 71   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
12.210   12 st/nd Thirumurai   Song # 139   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னிய அன்பின் வளநகர்
மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை
ஓசையும் எங்கும்விம்மப்
பொன்னியல் சுண்ணமும் பூவும்
பொரிகளுந் தூவியெங்குந்
தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர்
கொண்டனர் தொண்டரையே.
12.210   12 st/nd Thirumurai   Song # 264   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.
12.210   12 st/nd Thirumurai   Song # 276   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 426   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னியஅந் தக்கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான
தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ்
இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பலமொழிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 226   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 364   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 366   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 374   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 435   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 459   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
12.280   12 st/nd Thirumurai   Song # 509   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 629   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 646   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 690   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 693   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 722   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 725   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 762   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 768   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 834   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 853   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.
12.280   12 st/nd Thirumurai   Song # 1013   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1029   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1088   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1147   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1172   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1175   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 195   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 292   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 340   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்ன கேள்யான் மழவிடையார்
மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
கொட்டைப் பறித்தா என்றியம்பி.
12.310   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னன் வணங்கிப் போயினபின்
மாலு மயனும் அறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்
புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்
12.320   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
12.360   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.
12.370   12 st/nd Thirumurai   Song # 109   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 135   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list