சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மன்னு
மன்னும்     மன்னுயிர்     மன்னுசீர்     மன்னு     மன்னுந்     மன்னுதபோ     மன்னும்பதி     மன்னுஞ்     மன்னுகோயிலை     மன்னும்அக்     மன்னுதிரு     மன்னுதிருப்     மன்னுபுகழ்த்     மன்னுமிசை     மன்னுபெருஞ்     மன்னுதிருக்     மன்னும்இரா     மன்னுங்     மன்னுக    
3.072   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.

4.100   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

5.050   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?

5.073   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.

8.213   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மன்னுந் திருவருந் தும்வரை
   யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
   வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
   சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
   னென்னப் புலம்புவனே.

9.029   9 st/nd Thirumurai   Song # 1   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. 

10.518   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

10.613   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே. 14,

10.928   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

11.021   11 st/nd Thirumurai   Song # 37   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

12.000   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னுயிர் புரந்து வையம்
பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும்
என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத்
தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற
துயரமோர் அளவிற் றன்றால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 329   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னுசீர் வயலாரூர்
மன்னவரை வன்றொண்டர்
சென்னியுற அடிவணங்கித்
திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னமால் அயனறியா
முதல்வர்தா மெழுந்தருள
அந்நிலைகண் டடியவர்பாற்
சார்வதனுக் கணைகின்றார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.
12.190   12 st/nd Thirumurai   Song # 77   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும்
தான மன்றியும் தனுவெழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
12.210   12 st/nd Thirumurai   Song # 71   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
12.210   12 st/nd Thirumurai   Song # 276   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 226   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 364   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 374   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 435   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 459   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
12.280   12 st/nd Thirumurai   Song # 509   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 834   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1013   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1029   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1088   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1147   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1172   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 195   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 292   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 340   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 109   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
12.510   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list