சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மருவ
மருவலர்     மருவி     மருவார்     மருவிய     மருவுஞ்     மருவொத்த     மருவுந்     மருவிற்     மருவும்     மருவியகால்     மருவலார்புரம்     மருவியஏ     மருவு     மருவலார்தம்     மருவ     மருவினை,     மருவிப்    
1.020   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

1.026   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

1.064   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

1.118   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-
திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

2.027   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்,
இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!

2.075   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.

2.120   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவலார்தம் மதில் எய்ததுவும், மால் மதலையை
உருவில் ஆர(வ்) எரியூட்டியதும், உலகு உண்டதால்,
செரு வில், ஆரும் புலி, செங்கயல் ஆணையினான் செய்த
பொரு இல் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே.

3.014   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,
பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,
உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?

3.073   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர்
பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்;
வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு வெள்விடையினான்;
உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே

5.098   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்
குருவினை, குணத்தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

6.055   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.080   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை, மறப்பு இலியை, மதி ஏந்து சடையான் தன்னை,
உரு நிலவும் ஒண்சுடரை, உம்பரானை, உரைப்பு இனிய தவத்தானை, உலகின் வித்தை,
கரு நிலவு கண்டனை, காளத்தி(ய்)யை, கருதுவார் மனத்தானை, கல்விதன்னை,
செரு நிலவு படையானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

7.077   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மருவிப் பிரிய மாட்டேன், நான்; வழி நின்றொழிந்தேன்; ஒழிகிலேன்-
பருவி விச்சி(ய) மலைச்சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி,
குருவி ஓப்பி, கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டந்
தர, அம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

8.138   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

10.402   10 st/nd Thirumurai   Song # 66   திருமூலர்   திருமந்திரம்  
மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.

10.407   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

10.510   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.

10.902   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.

10.915   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

12.070   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகும் இன்பமோ டமுதுசெய் திடஅருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்.
12.110   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.
12.280   12 st/nd Thirumurai   Song # 381   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 997   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மருவியஏ ழிசைபொழிய
மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப
உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
பரவியே புறத்தணைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list