சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மற்றவர்
மற்றவர்     மற்றவர்தஞ்     மற்றவர்தாம்     மற்றவர்தம்     மற்றவர்தந்     மற்றவர்க்கு     மற்றவர்கட்     மற்றவர்கள்    
12.030   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மற்றவர் சொன்ன மாற்றம்
கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள்
உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம்
முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக
விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.
12.080   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர்தஞ் செய்கை
வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில்
தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில்
தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க்
குடைந்து புறகிட்டான்.
12.100   12 st/nd Thirumurai   Song # 93   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் திண்ண னார்க்கு  
மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும்  
தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு  
குறுகுவோம் மெல்ல என்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர்  
குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ
இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக்
கூனெனும் உரைமுன் கண்டார்.
12.110   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும்
துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே
விடுவதெனக் கூறினார்.

12.240   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங்
கடப்பாட்டில் ஊட்டுவார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு

பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.

12.280   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 466   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 484   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 610   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 615   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.
12.280   12 st/nd Thirumurai   Song # 799   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.
12.280   12 st/nd Thirumurai   Song # 852   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 906   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 910   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1114   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
12.280   12 st/nd Thirumurai   Song # 1157   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.
12.290   12 st/nd Thirumurai   Song # 243   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.
12.290   12 st/nd Thirumurai   Song # 405   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.
12.300   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
12.420   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.
12.450   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
12.570   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மற்றவர்தாம் போயினபின்
சிலநாளில் வற்காலம்
உற்றலும்அச் சுற்றத்தார்
உணவின்றி இறப்பதனில்
பெற்றமுயர்த் தவர்அமுது
படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போம்
எனக்கூடு குலைத்தழிந்தார்.
12.690   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list