சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மலை
மலையான்     மலையார்     மலைமகள்     மலை     மலையினார்     மலையுமனோ     மலைமேல்     மலைமேலாய்     மலைவரும்போர்     மலைதிரிந்த     மலையர்     மலைசூழ்ந்     மலையத்     மலைத்தலங்கள்     மலைவளர்சந்     மலைபடு     மலைவி     மலைக்கு     மலையும்     மலைச்சிகரச்     மலைநாட்     மலைமலிந்த     மலையொடு     மலையவன்     மலையின்     மலையில்     மலைக்     மலையே     மலையானை,     மலைமகளைப்     மலையானை;     மலைக்கும்(ம்)     மலைக்கண்     மலைச்    
1.009   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

1.016   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்,
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

1.020   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.

1.021   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

1.027   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

1.047   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.072   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையார் மங்கைபங்கர், அங்கை அனலர் மடல் ஆரும்
குலை ஆர் தெங்கு, குளிர் கொள் வாழை, அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன், முளை வெண் நகையார், மூவா மதியினார்,
கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர்
மறைக்காடு, நெய்த் தானம்,
நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம்
பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.098   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன்
தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

1.099   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி
குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம்
இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த
சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!

1.102   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும்
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித்
தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய்! என்ன, தொல்வினை ஆய நில்லாவே.

1.112   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலைமகள் மறுகிட, மதகரியைக்
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.

2.023   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.

2.105   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும்,
அரக்கன்தன்
தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு
கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை
போமே.

2.113   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை இலங்கும் சிலை ஆக வேக(ம்) மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த(வ்)அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர்க்கைதை கண்டல் வெறி விரவலால்,
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே.

3.015   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,
அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!

3.018   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம் வரு மலை அன மாடக்கோயிலே.

3.059   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.

3.062   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.069   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே.

4.008   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.

4.035   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.

4.044   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்,
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை,
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!

4.057   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.

4.092   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.

5.010   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

5.037   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

5.091   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

6.019   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்   சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்   தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.024   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்; மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்;
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்;
இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்;
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்;
கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்;
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.032   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையான் மடந்தை மணாளா, போற்றி!
மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி!
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி!
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி!
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி!
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி!
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6.034   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ? வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலை பேறு பெறுவித்து நின்ற நாளோ? நினைப்ப (அ)ரிய தழல் பிழம்பு ஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ? அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையால் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.071   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;
தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,
விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

6.078   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே;
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.080   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை, மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக்
கலை நிலவு கையானை, கம்பன் தன்னை, காண்பு இனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை,
விலை பெரிய வெண் நீற்று மேனியானை,   மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை,
சிலை நிலவு கரத்தானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

6.088   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை; மறையாலும் அறிய ஒண்ணாக்
கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை, அடியார்கள் துயரம் எல்லாம்;
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை; புரம் மூன்று எய்த
சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

7.009   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்;
சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர்
கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

7.013   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி,
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.

7.016   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலை மடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே,   வல் இருள் ஆய் எல்லா-
உலகு உடன் தான் மூட, இருள் ஓடும் வகை, நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த  உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி, யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி, வரும்  அரிசிலின் தென் கரை மேல்,
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப் புகையால் கணமுகில் போன்ற(அ)ணி கிளரும், கலய நல்லூர் காணே .



7.077   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலைக்கண் மடவாள் ஒரு பால் ஆய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்!
சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய்! தீர்த்தன் நீ
மலைக் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

7.079   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள்
மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை
அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து,
திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே.

7.082   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன், மற்றுக்
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான், திருச் சுழியல்
அலை ஆர் சடை உடையான், அடி தொழுவார் பழுது உள்ளம்
நிலையார்; திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே.

8.112   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

8.112   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

10.307   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

10.903   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

10.924   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 55   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி

11.009   11 st/nd Thirumurai   Song # 8   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
மலைவரும்போர் வானவரும் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி நிலைதளரக்
கண்டமையால் தண்சாரற் காலத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு.

11.010   11 st/nd Thirumurai   Song # 60   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.

11.010   11 st/nd Thirumurai   Song # 62   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.

11.023   11 st/nd Thirumurai   Song # 43   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
மலையார் கலையோட வார்ஓடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.

11.025   11 st/nd Thirumurai   Song # 11   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத்
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.

11.029   11 st/nd Thirumurai   Song # 56   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழவிருந்
தான்நெடு மேருவென்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
வையாற் றருமணியே.

11.036   11 st/nd Thirumurai   Song # 14   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.

12.000   12 st/nd Thirumurai   Song # 216   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மலைவளர்சந் தகில்பீலி
மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை
யாறுகடந் தேறியபின்
இலகுபசும் புரவிநெடுந்
தேர்இரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத்
திருவதிகைப் புறத்தணைந்தார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மலைபடு மணியும் பொன்னும்
தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் 
பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் 
பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு
திசைதொறும் நெருங்க வந்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான்
கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய்
அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.
12.190   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மலையும் பல்சம யங்களும்
வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி
அழிந்ததென் றழுங்கிக்
கொலையும் பொய்ம்மையும் இலமென்று
கொடுந்தொழில் புரிவோர்
தலையும் பீலியும் தாழவந்
தொருசிறை சார்ந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 346   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மலைச்சிகரச் சிகாமணியின்
மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி
ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த்
தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 897   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.
12.290   12 st/nd Thirumurai   Song # 208   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மலையான் மடந்தை மலர்ப்பாதம்
மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத்
தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி
ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம்புவார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 79   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 175   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.
12.410   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மலையொடு மலைகள் மலைந்தென
அலைமத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறு
கொலைமத கரிகொலை யுற்றவே.
12.720   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மலைநாட் டெல்லை யுட்புகுத
வந்த வன்தொண் டரைவரையில்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச்
சேரர் பெருமான் எதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய
சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத ஆரூரர்
தாமுந் தொழுது கலந்தனரால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list