சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மாத
மாது     மாதர்     மாதா     மாதன     மாதுநல்     மாதவர்     மாத்திரை     மாதரை     மாத     மாதரங்கம்     மாதவத்     மாதவியும்     மாதவத்தோர்     மாதொரு     மாதுடன்     மாதவ     மாதங்கந்     மாதங்கம்     மாதினியார்     மாதர்ப்     மாதரவர்     மாதுக்க     மாதவர்கள்     மாதர்தம்     மாதவம்     மாதிரம்,     மாதினை     மாதராரொடு,     மாத்தன்தான்,     மாதரார்     மாதினுக்கு     மாதிடங்     மாதுற்ற     மாதி     மாதொர்    
1.097   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

1.136   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

2.001   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

2.004   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

2.104   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு, அலைபுனல், அழல்,
நாகம்,
போது இலங்கிய கொன்றையும், மத்தமும், புரிசடைக்கு
அழகு ஆக,
காது இலங்கிய குழையினன்; கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அறக்
கெடும் அன்றே.

2.106   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
அடையாவே.

2.112   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.

3.020   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

3.084   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

4.003   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.



4.092   4 st/nd Thirumurai   Song # 15   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.

5.032   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதினை மதித்தான், ஒருபாகமா;
காதலால் கரந்தான், சடைக் கங்கையை;
பூதநாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு
ஆதி; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

5.043   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதராரொடு, மக்களும், சுற்றமும்,
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர் தொழப்
போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.

5.045   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்;
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத்
தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.

5.063   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை-
ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே.

5.073   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன்,
வேதநாயகன், வேதியர் நாயகன
பூதநாயகன், புண்ணியமூர்த்தியே.

6.021   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6.061   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம்
நாதனே! என்று என்று பரவி, நாளும் நைந்து உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து,
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி,
காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

6.094   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற ஆறே!.

7.013   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி,
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர்
நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

7.068   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை, மணியினை, பணிவார் வினை கெடுக்கும்
வேதனை, வேத வேள்வியர் வணங்கும் விமலனை, அடியேற்கு எளிவந்த
தூதனை, தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

8.116   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத்
தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித்
தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்;
காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால்,
போது ஆடு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

8.143   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி,
கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும்,
போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே.

8.213   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே.

8.214   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மாதுற்ற மேனி வரையுற்ற
   வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
   காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
   மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
   வோநன்மை செப்புமினே.

9.006   9 st/nd Thirumurai   Song # 2   சேந்தனார்   திருவிசைப்பா  
மாதி மணங்கம ழும்பொழில்
   மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
   சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
   அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
   திண்டோள் புணர நினைக்குமே. 

9.028   9 st/nd Thirumurai   Song # 6   சேதிராயர்   திருவிசைப்பா  
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன் ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 

10.404   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

10.408   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

10.517   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படும்நந்தி
பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

10.713   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.
10.721   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.

10.721   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

11.022   11 st/nd Thirumurai   Song # 41   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.

11.033   11 st/nd Thirumurai   Song # 65   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 21   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்
11.037   11 st/nd Thirumurai   Song # 60   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்

12.000   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 52   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.
12.000   12 st/nd Thirumurai   Song # 138   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாதொரு பாக னார்க்கு
வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி
மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை
மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத்
திருவவ தாரஞ் செய்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 313   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாதுடன் கூட வைகி
மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு 
செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச்
செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயில் நண்ணிக்
கும்பிடும் விருப்பால் நம்பி.
12.030   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்.
12.040   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.
12.050   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும்
சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் 
திருமணி வாயில் சேர்ந்தான்.
12.080   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்.
12.150   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மாதங்கம் எருத்தினில் வைத்தவர்
தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை
அமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீது பணிந்தெழுந்
தார்கள் அப்போ
தோதங்கிளர் வேலையை ஒத்தொலி
மிக்க தவ்வூர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாதினியார் திருவயிற்றின்
மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின்
கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப
விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற
இளங்குழவிப் பதங்கடந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 384   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 424   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங்
கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற்
பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா
மையில்இறைஞ்சி எதிரகன்றார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 836   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1016   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.
12.290   12 st/nd Thirumurai   Song # 259   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாதரவர் மகிழ்க்கீழே
அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும்
இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே
அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ்
அவர்போதப் போயணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 402   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாதர்தம் ஏவ லாலே
மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே
பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும்
என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண
வேண்டுமென் றருளிச் செய்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list