சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மாய
மாயம்     மாயாள்     மாயா     மாயை     மாயையில்     மாயையிற்     மாயையின்     மாயைகைத்     மாயனு     மாய     மாயப்     மாயனை     மாயன்நன்     மாயங்கள்     மாயனைஒர்     மாயவன்     மாயிரு     மாயனும்     மாயவன்,     மாயத்தை     மாயன்     மாய்ந்தன,     மாயனே!    
2.112   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவிக் கைதொழ,
தீய வல்வினை தீருமே.

3.102   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே.

4.031   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!

4.043   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

4.093   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?

4.094   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

7.056   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாயம் ஆய மனம் கெடுப்பானை, மனத்துளே மதி ஆய் இருப்பானை,
காய மாயமும் ஆக்குவிப்பானை, காற்றும் ஆய்க் கனல் ஆய்க் கழிப்பானை,
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை, ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை,
வேய் கொள் தோள் உமை பாகனை, நீடூர் வேந்தனை, பணியா விடல் ஆமே?

8.123   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே!
நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய' என்று, உன் அடி பணியாப்
பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ!
சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!

8.136   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும்,
போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு,
ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்:
சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.

8.142   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்;
வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்;
காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள்' என்று காட்டிய
சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

10.408   10 st/nd Thirumurai   Song # 95   திருமூலர்   திருமந்திரம்  
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.

10.721   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.

10.729   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே. 30,

10.804   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

10.806   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே. 7,

10.807   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

10.807   10 st/nd Thirumurai   Song # 42   திருமூலர்   திருமந்திரம்  
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே. 8,

10.814   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

10.814   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

10.827   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

10.833   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

10.902   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

10.928   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

11.006   11 st/nd Thirumurai   Song # 100   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 56   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே
நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.

11.023   11 st/nd Thirumurai   Song # 18   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
மாயனைஒர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை மாய
உருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.

11.032   11 st/nd Thirumurai   Song # 9   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே.

11.037   11 st/nd Thirumurai   Song # 80   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list