சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மால
மாலும்     மாலினுக்கு     மாலினோடு     மால்     மாலாங்க     மால்போ     மாலகு     மாலை     மால்இடப்பாற்     மாலையொப்     மாலின்உந்     மால     மாலயற்     மால்பெருக்குஞ்     மாலா     மாலையிடை     மாலைதண்     மாலயனுக்     மாலும்,     மாலோடு     மாலொடு     மாலவன்,     மாலொடும்     மாலைத்     மாலினாள்     மாலினை     மாலொடும்,     மால்யானை     மாலாலும்     மாலைப்     மாலே,     மால்,     மாலுலா     மாலோ    
1.008   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.041   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;
காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.
1.047   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

1.081   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

1.082   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.

2.006   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

2.008   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.

2.025   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?

2.038   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.

2.046   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய்,
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே.

2.066   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

2.096   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.

3.018   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.

3.035   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.

3.047   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?

3.054   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!

3.076   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே.

3.083   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்
நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.

3.109   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.

4.015   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.

4.030   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.043   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

4.088   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

5.006   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

5.025   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலினோடு மறையவன் தானும் ஆய்,
மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்;
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப்
பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.

5.034   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலொடும், மறை ஓதிய நான்முகன்,
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்;
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே.

5.056   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்!
காலம் வந்து கடை முடியாமுனம்
கோல வார் பொழில், கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!

5.057   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப்
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி
நீலகண்டனை, நித்தல் நினைமினே!

6.004   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து, மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம் புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி, குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.021   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6.053   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்;
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம   எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்;
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்;   வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6.056   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.078   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;   வண் கயிலை மா மலையை வந்தியாத,
நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.094   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே ஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே ஆகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே!.

7.016   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மால் அயனும் காண்பு அரிய மால் எரி ஆய் நிமிர்ந்தோன், வன்னி மதி சென்னிமிசை  வைத்தவன், மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன், விடை ஊரும் விமலன், உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ, கோல மயில் ஆல, சுரும்பொடு வண்டு இசை முரல, பசுங்கிளி  சொல்-துதிக்க,
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலய நல்லூர்  காணே .

8.107   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம்
போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.111   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாலே, | பிரமனே, மற்று ஒழிந்த | தேவர்களே,
நூலே, | நுழைவுஅரிய | நுண்ணியன் ஆய், | வந்து, அடியேன்
பாலே | புகுந்து, | பரிந்து உருக்கும் | பாவகத்தால்,
சேல் ஏர் | கண் நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.143   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மால், அயன், வானவர் கோனும், வந்து வணங்க, அவர்க்கு அருள்செய்த ஈசன்,
ஞாலம் அதனிடை வந்திழிந்து, நல் நெறி காட்டி, நலம் திகழும்
கோல மணி அணி மாடம் ணீடு குலாவும் இடவை மட நல்லாட்கு,
சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.

9.007   9 st/nd Thirumurai   Song # 1   சேந்தனார்   திருவிசைப்பா  
மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
   வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
   குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
   என்னும்என் மெல்லியல் இவளே. 

9.024   9 st/nd Thirumurai   Song # 9   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
மாலோ டயனும் அமரர் பதியும்
   வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
   என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
   பரமன் ஆடுமே. 

10.100   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

10.206   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

10.516   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே. 17,

11.008   11 st/nd Thirumurai   Song # 38   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய

11.008   11 st/nd Thirumurai   Song # 92   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்

11.022   11 st/nd Thirumurai   Song # 2   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.

11.034   11 st/nd Thirumurai   Song # 44   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.

12.000   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்
சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.
12.000   12 st/nd Thirumurai   Song # 236   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மால யன்சத மகன்பெருந் தேவர்
மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்
சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித்
திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக்
காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக்
காத லன்பர்கண நாதர் புகும்பொற்
கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்
குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.
12.040   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மாலயற் கரிய நாதன்
வடிவொரு சோதி யாகச்
சாலவே மயங்கு வார்க்குச்
சங்கரன் தான்ம கிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோ
டிடபவா கனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த
திருத்தொண்டர் தம்மை நோக்கி.
12.270   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.
12.280   12 st/nd Thirumurai   Song # 208   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 504   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலை சூழ்புறங் கடைகளின்
மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன்
கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர
நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே
திகைமலர்ப் பந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 685   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலை வெண்குடை வளவர்சோ
ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற்
றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல.
12.280   12 st/nd Thirumurai   Song # 715   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 842   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1009   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1068   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலை சாந்தொடு மஞ்சனம்
நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம்
பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன
நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும்
வியப்பெய்து நாளில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 334   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலும் அயனுங் காணாதார்
மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை
அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான்
அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார்
திருமா ளிகையை நேர்நோக்கி.
12.290   12 st/nd Thirumurai   Song # 377   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாலைதண் கலவைச் சேறு
மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல.
12.560   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மாலயனுக் கரியானை
மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால்
வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு
குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார்
முடிமீது வீழ்த்தயர்வார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list