சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் முன்
முன்     முன்றில்வாய்     முன்பனை,     முன்னையொப்     முன்படைத்     முன்பு     முன்னவ     முன்னெழும்     முன்னை     முன்னின்     முன்னிருந்     முன்னிக்     முன்சொன்ன     முன்னிளங்     முன்னம்     முன்புநீ     முன்னேவந்     முன்னிருந்த     முன்னெற்றி     முன்புசெய்     முன்புநின்     முன்புதிருக்     முன்னைநாள்     முன்புபோல்     முன்னிலை     முன்னின்ற     முன்னவரை     முன்னாள்     முன்மால்     முன்னணைந்த     முன்னிறைஞ்சித்     முன்செய்த     முன்னின்று     முன்துயில்     முன்னியஅப்     முன்புதிரு     முன்னு     முன்னிய     முன்னம்,     முன்நெறி     முன்துணை     முன்னியும்     முன்னே     முன்னையார்;     முன்கை     முன்னமே     முன்னவன்(ன்),     முன்னும்     முன்னவன்     முன்னவன்,     முன்னைச்     முன்னைப்     முன்னி,     முன்னானை,     முன்,     முன்றகர்த்     முன்னோன்     முன்னோ     முன்னுங்    
1.011   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.

1.060   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

1.079   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள்
அடி பணிந்து ஏத்த,
பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார்
பேணிய கோயில்
பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய
கையினர் ஆகி,
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

1.101   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.

1.120   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்
என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.

2.008   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!

2.029   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

2.029   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.

2.099   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே!

2.121   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

3.035   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.

4.001   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

4.011   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!

4.028   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!

4.070   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.

4.074   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

4.079   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்;
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

4.087   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

4.090   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி
அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.

4.112   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.

5.016   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்-
தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்;
என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்;
பின்னையார் அவர்-பேரெயிலாளரே.

5.027   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னை ஆறு முயன்று எழுவீர்; எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்!
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.

5.030   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.

5.034   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்,
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தம் கையால்-தொழுவார் தலைவாணரே.

5.057   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

5.059   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப்
பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம்
மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள் உடையார்களே.

5.061   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்;
மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்-
பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.

5.064   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னை நான் செய்த பாவம் முதல் அற,
பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது-
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.

5.091   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

5.098   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே?
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.

6.025   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.

6.048   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல்  அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி
அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி
மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி   வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

6.056   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.063   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;   செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

7.022   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான்,
மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .

7.032   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ?
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ?
குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா!
என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!

7.035   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே,
என்னை நீ தியக்காது எழு(ம்), மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர்
அன்னச்சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணி பொழில்,
புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழப் போதுமே.

7.038   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து என்கொல்? மறவாத  சிந்தையால் வாழ்வேன்;
பொன்னே! நல்மணியே! வெண் முத்தே! செய் பவளக் குன்றமே! ஈசன்! என்று உன்னையே  புகழ்வேன்;
அன்னே! என் அத்தா! என்று அமரரால் அமரப் படுவானை, அதிகை மா நகருள்  வாழ்பவனை,
என்னே! என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்  யானே! .

7.051   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை,
அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள்
செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான்
என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

7.083   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,
செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?

8.107   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம்' ஏல் ஓர் எம்பாவாய்!

8.107   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்
என்னச் சிலை குலவி, நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள், நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை' ஏல் ஓர் எம்பாவாய்!

8.108   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்
பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின்
மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை;
தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை;
என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!

8.113   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

8.116   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர் குழாம்,
பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்ப,
தன் நீறு எனக்கு அருளி, தன் கருணை வெள்ளத்து
மன் ஊற, மன்னும் மணி உத்தரகோசமங்கை
மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி,
பொன் ஏறு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

8.121   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று,
பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!
என்?' என்று, அருள் இவர நின்று, போந்திடு' என்னாவிடில், அடியார்,
உன் நின்று, இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!

8.126   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை,
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு,
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த
அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

8.147   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

8.212   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
முன்றகர்த் தெல்லா விமையோரை
   யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
   தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
   ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
   மூடுமென் றெள்குதுமே.

8.214   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
முன்னு மொருவ ரிரும்பொழில்
   மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
   தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
   தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
   பேரும் மயிலினமே.

8.216   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
முன்னோன் மணிகண்ட மொத்தவன்
   அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
   தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
   னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
   யாம்விழை பொங்கிருளே.

8.216   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
முன்னோ னருள்முன்னும் உன்னா
   வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
   கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
   தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
   மாடுசிற் றம்பலமே.

8.216   8 st/nd Thirumurai   Song # 43   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
முன்னுங் கடுவிட முண்டதென்
   தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
   கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
   தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
   நான்மறை யுத்தமரே.

10.101   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 

10.121   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

10.122   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

10.219   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 59   திருமூலர்   திருமந்திரம்  
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. 

10.603   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

10.607   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

10.714   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

10.803   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

10.813   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

10.814   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே. 15,

10.832   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

10.839   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

11.020   11 st/nd Thirumurai   Song # 12   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.

12.000   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.
12.000   12 st/nd Thirumurai   Song # 201   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
முன்புநீ நமக்குத் தொண்டன்
முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவ லாலே
பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத்
தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர்
நாம்தடுத் தாண்டோம் என்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 277   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த
இவன்யாரோ வெனநினைந்தார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.
12.100   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.
12.100   12 st/nd Thirumurai   Song # 102   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்புசெய் தவத்தின் ஈட்டம்  
முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட  
அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வ
ள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத்
தெழுபெரு வேட்கை யோடும்.
12.100   12 st/nd Thirumurai   Song # 114   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்புநின் றரிதில் நீங்கி
மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப்  
பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும்
அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப்  
புதுமலர்க் காவிற் புக்கார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்புதிருக் காளத்தி
முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு
பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும்  
சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார்
அவர்கருத்தின் அளவினரோ.
12.100   12 st/nd Thirumurai   Song # 160   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்னைநாள் போல்வந்து
திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான்
அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி  
மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப்  
பின்பாக ஒளித்திருந்தார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்னிலை கமரே யாக
முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச்
செவியுற வடுவி னோசை
அந்நிலை கேட்ட தொண்டர்
அடியிணை தொழுது வாழ்த்தி
மன்னும்ஆ னாயர் செய்கை
அறிந்தவா வழுத்த லுற்றேன்.
12.140   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 127   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 254   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
முன்னாள் அயனுந் திருமாலும்
முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 381   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
முன்பு கண்டுகொண் டருளின்ஆர்
அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா
ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப்
போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 164   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 577   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1150   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னிறைஞ்சித் திருவருளின்
முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன்
புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம்
கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி
மனங்களிப்ப வணங்குவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 132   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்செய்த அருள்வழியே
முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை
தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின்
வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர்
எனப்பதிகம் போற்றிசைத்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 281   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னின்று முறைப்பாடு
போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங்
கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன்
வணங்கியே வழிக்கொள்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 283   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னின்று தொழுதேத்தி
முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
காஞ்சிமா நகரணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 323   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னை வினையால் இவ்வினைக்கு
மூல மானாள் பாலணைய
என்னை உடையாய் நினைந்தருளாய்
இந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செயவென்று
பெருமா னடிகள் தமைநினைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 376   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
சேவகம் முன்பு காட்ட.
12.300   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முன்னியஅப் பொருள்மாலைத்
தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண்
டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந்
திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும்
பிரியாமைத் தாளடைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 65   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
12.440   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்.
12.480   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
முன்னாள் முதலை வாய்ப்புக்க
மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூரர் எழுந்தருளா
நின்றார் என்று சேரர்பிராற்கு
அந்நாட் டரனார் அடியார்கள்
முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும்
காசுந் தூசும் பொழிந்தளித்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list