சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் முற்
முற்றல்     முற்றாதது     முற்றும்     முற்பதி     முற்சது     முற்றுமெய்ஞ்ஞானம்     முற்சூது     முற்     முற்றின,     முற்றிக்     முற்றிலா     முற்றா     முற்றினானை;     முற்றாத     முற்று    
1.001   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.032   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

1.088   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

3.071   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை,
செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன் - உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்-
பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே.

3.114   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி, தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.

4.003   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



4.061   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றின, நாள்கள் என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப்
பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!

4.082   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர்
சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம்
தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.

5.014   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றிலா மதி சூடும் முதல்வனார்;
ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;
எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

5.018   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

5.053   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ,
வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம்
கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

5.094   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றினானை; இராவணன் நீள் முடி
ஒற்றினானை, ஒருவிரலால் உற;
பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச்
சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

6.001   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான்
ஆய முதல்வன் தன்னை,
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ்
ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை,
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை,
கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

6.010   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்;
கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி
பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்;
பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.013   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு,
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்;
மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு,
புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

6.044   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே!
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே! உலகு ஓம்பும் ஒண்சுடரே! ஓதும் வேதம்,
கற்றானே, எல்லாக் கலைஞான(ம்)மும்! கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச்
செற்றானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.063   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை, ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை, பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6.080   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை;   முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும்
பற்று ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; பராபரனை; பரஞ்சுடரை; பரிவோர் நெஞ்சில்
உற்றானை; உயர் கருப்புச் சிலையோன் நீறு ஆய் ஒள் அழல்வாய் வேவ உறும் நோக்கத்தானை;
செற்றானை, திரிபுரங்கள்; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

10.321   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 

10.407   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

12.280   12 st/nd Thirumurai   Song # 954   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முற்றும் மெய்யெலாம் புளகங்கள்
முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு
வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை
எதிர்நதி மிசைவரு கரனென்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1222   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை
நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்த வேலை.
12.320   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
முற்சூது தாந்தோற்று
முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும்
வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச்
சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும்
பெயர்பெற்றார் நானிலத்தில்.
12.410   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
முற்றும் பொருசே னைமுனைத் தலையில்
கல்திண் புரிசைப் பதிகட் டழியப்
பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்
சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list