சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மூ
மூரல்     மூவர்     மூவரும்     மூத்     மூப்பு     மூவா     மூலன்     மூடங்     மூலத்     மூலத்து     மூல     மூன்று     மூன்றுள     மூடுதல்     மூன்றினில்     மூவகைத்     மூவணை     மூங்கில்     மூன்றரணம்     மூவுலக     மூண்டவப்     மூண்டுமுன்     மூப்புறும்அத்     மூண்டபெரு     மூவ     மூடு     மூவாத     மூரியார்     மூவேந்தர்     மூத்தானை,     மூடிய     மூதணி     மூக்கே,     மூவகை     மூர்த்தி     மூடினார்,     மூவனாய்,     மூர்க்கப்     மூக்கு     மூப்பினோடு     மூலம்     மூக்கினால்     மூவனை,     மூரி     மூலநோய்     மூள்வு     மூத்தவனாய்     மூவாய்,     மூத்தவனை,     மூவாது     மூவன்     மூ     மூலனூர்,     மூப்பதும்     மூன்று,     மூத்தானே,     மூவரும்,     மூவல்     மூப்பான்     மூவர்நின்     மூலமாய்    
1.018   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!

1.027   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர்
ஆவர், என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

1.072   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி
கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில்
தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை;
காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப்
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர்
தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

2.014   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே

2.071   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு
உண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல்
நிருத்தம் செய்ய,
கூடிய வேதுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும்
குறும்பலாவே.

3.013   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால், வீட்டினார் அவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே!

3.059   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே.

3.060   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்
தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்;
பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம்
வக்கரையே.

3.081   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.

3.099   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே.

3.902   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட
தேவ ராக்குங் கிளியன்ன வூரனே.

4.009   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை,
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!

4.018   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;
மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;
மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;
மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.

4.032   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்;
தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி,
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.

4.113   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.

5.028   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர்
நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.

5.030   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.

5.032   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம்
காவனாய், கடுங் காலனைக் காய்ந்தவன்;
பூவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்த்
தேவன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

5.035   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட,
வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான்,
தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.

5.047   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள்
நோக்குவான்; நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே.

5.048   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன், அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்பு அது ஆக, நாம் சென்று அடைந்து உய்துமே.

5.057   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை,
காலன் ஆகிய காலற்கும் காலனை,-
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச்
சூலபாணிதன் பாதம் தொழுமினே!

5.058   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.

5.089   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

6.015   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்;
மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்;
சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன்
  ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்;
மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று
ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்
காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6.019   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும்
பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.023   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்; முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்;
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்;
ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்; அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்;
வாரி மத களிறே போல்வான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6.023   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்;
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்; ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்;
பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத் தடவரையே போல்வான் கண்டாய்;
மாலை சேர் கொன்றை மலிந்தான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6.027   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர்
நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற  நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர்
ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.

6.044   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே!
ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே!
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.055   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.058   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ,
வா வா! என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.

6.060   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;  திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டேன், நானே.

6.074   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை,
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை,
திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை,
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானை, நாவினில் நல் உரை ஆனானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

6.085   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூவன் காண்; மூவர்க்கும் முதல் ஆனான் காண்; முன்னும் ஆய், பின்னும் ஆய், முடிவு ஆனான் காண்;
காவன் காண்; உலகுக்கு ஓர் கண் ஆனான் காண்; கங்காளன் காண்; கயிலை மலையினான் காண்;
ஆவன் காண்; ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண்; ஆர் அழல் ஆய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணாத்
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

6.090   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை,
நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும்
காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

6.092   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு   உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

6.098   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே; நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.

7.002   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மூடு ஆய முயலகன், மூக்கப் பாம்பு, முடை நாறிய வெண்தலை, மொய்த்த பல் பேய்,
பாடாவரு பூதங்கள், பாய் புலித்தோல், பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள்,
தோடு ஆர் மலர்க் கொன்றையும், துன் எருக்கும்; துணை மா மணி நாகம் அரைக்கு  அசைத்து, ஒன்று
ஆடாதனவே செய்தீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

7.012   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர்,
நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர்
கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும்,
வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.

7.018   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை;
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால்,
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

7.055   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

7.080   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி;
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்-
தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.

8.102   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,
தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்

8.116   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மூன்று, அங்கு, இலங்கு நயனத்தன், மூவாத
வான் தங்கு தேவர்களும், காணா மலர் அடிகள்,
தேன் தங்கி, தித்தித்து, அமுது ஊறி, தான் தெளிந்து, அங்கு,
ஊன் தங்கிநின்று, உருக்கும் உத்தரகோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடி, குல மஞ்ஞை
போன்று, அங்கு, அன நடையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

8.138   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா
ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்
பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!

8.147   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.

8.215   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மூவல் தழீஇய அருண்முத
   லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
   துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
   யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
   தளிய களியன்னமே.

8.221   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மூப்பான் இளையவன் முன்னவன்
   பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
   ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
   றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
   தாழ்குழற் பூங்கொடியே.

8.224   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மூவர்நின் றேத்த முதலவன்
   ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
   யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
   மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
   உரைப்பது பூங்கொடியே.

9.011   9 st/nd Thirumurai   Song # 10   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
   முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
   பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
   அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
   சிவபதம் குறுகிநின் றாரே. 

10.100   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

10.116   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

10.202   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 

10.306   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. 

10.306   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

10.309   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 68   திருமூலர்   திருமந்திரம்  
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 

10.313   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

10.408   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

10.818   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

10.824   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

10.834   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

10.915   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

10.919   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

10.924   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

10.929   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

11.023   11 st/nd Thirumurai   Song # 89   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி அறம்.

11.032   11 st/nd Thirumurai   Song # 28   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
மூவுலக கத்தவ ரேத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன்
மாலயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.

12.020   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மூண்டுமுன் பலராய் வந்தார்
தனிவந்து முட்டி னார்கள்
வேண்டிய திசைகள் தோறும்
வேறுவே றமர்செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே
அனைவர்க்கும் அனைவ ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து
கலந்துமுன் துணித்து வீழ்த்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 418   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மூவ ருக்கறி வரும்பொரு
ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு
துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல்
தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ
தரவுடன் கலந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 437   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மூவ லூருறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப்
புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு
துறையினில் வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1082   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மூடு பன்மணிச் சிவிகையுள்
பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை
சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா
லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச்
சிவிகையை நீக்கி.
12.290   12 st/nd Thirumurai   Song # 125   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மூவாத முதலாகி
நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத்
திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காதல்
உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை
யார்திருமா ளிகைசார்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 155   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மூவாத முழுமுதலார்
முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை
வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர்
நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார்
குருகாவூர் மேவுவார்.
12.480   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
12.640   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.
12.690   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மூலத் தானத் தெழுந்தருளி
இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
அமருந் தானம் பலவணங்கி.
12.720   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மூல மான திருத்தொண்டத்
தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண்
கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை
அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list