சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மெய்
மெய்த்     மெய்யின்     மெய்த்து     மெய்யர்     மெய்ப்பொருள்     மெய்ப்பொரு     மெய்கண்ட     மெய்யக     மெய்யினில்     மெய்வாய்கண்     மெய்கலந்     மெய்த்தாள்     மெய்த்தவத்     மெய்யன்     மெய்த்தொண்டர்     மெய்யெலாம்     மெய்யன்பர்     மெய்த     மெய்ம்மைப்பணி     மெய்த்த     மெய்ம்மேற்கண்     மெய்ந்நிறைந்த     மெய்ம்மை     மெய்த்திரு     மெய்ப்பசியால்     மெய்த்தவரைக்     மெய்யில்     மெய்     மெய்யுளே     மெய்யனை,     மெய்ப்     மெய்த்தானத்து     மெய்யானை,     மெய்த்தவன்     மெய்த்தவத்தை;     மெய்யை     மெய்யன்,     மெய்க்காட்டிட்டு,     மெய்யனே!     மெய்யே     மெய்யரே    
1.016   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.

1.029   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

1.029   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

1.050   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

1.131   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

2.010   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

3.018   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.

4.005   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம் என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!

4.054   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

4.076   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி,
பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி,
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!

4.099   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!

5.083   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக்
கையனை, கடல் நாகைக்காரோணனை,
மை அனுக்கிய கண்டனை, வானவர்
ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

5.084   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,
பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!
கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்
ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!

6.026   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை, வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை,
ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை, உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்
வைப்பானை, களைவானை, வருவிப்பானை, வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை,
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

6.042   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம்
இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே!
மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய
நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

6.046   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை, வெந்தீ ஏந்தும்
கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை, கண்மூன்று உடையான் தன்னை,
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை, பாய் புலித்தோல் உடையான் தன்னை,
ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.052   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்; விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்;
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே.

6.066   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்யானை, தன் பக்கல் விரும்புவார்க்கு; விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும்
பொய்யானை; புறங்காட்டில் ஆடலானை; பொன் பொலிந்த சடையானை; பொடி கொள் பூதிப்
பையானை; பை அரவம் அசைத்தான் தன்னை; பரந்தானை; பவள மால்வரை போல் மேனிச்
செய்யானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

6.077   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்;   வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்;
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்;
ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து,
வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

6.079   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மெய்த்தவத்தை; வேதத்தை; வேதவித்தை; விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை;
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே, ஏற வாங்கி,
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானை; புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.

7.033   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
கையில் சூலம் அது உடையரோ? கரிகாடரோ? கறைக் கண்டரோ?
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ? விடை ஏறரோ? கடைதோறும் சென்று
ஐயம் கொள்ளும் அவ் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.057   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மெய்யனை, மெய்யில் நின்று உணர்வானை, மெய் இலாதவர் தங்களுக்கு எல்லாம்
பொய்யனை, புரம் மூன்று எரித்தானை, புனிதனை, புலித்தோல் உடையானை,
செய்யனை, வெளிய(த்) திருநீற்றில்-திகழும் மேனியன், மான்மறி ஏந்தும்
மை கொள் கண்டனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

7.063   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி,
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணும் மூன்றும் உடையாய் ஒரு நம்பி,
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

7.086   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன்,
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான்,
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்
ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே!

8.102   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;

8.105.01   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

8.129   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

8.207   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
   மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
   திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
   வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
   தேனுண் டெழிறருமே.

9.009   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான
   விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந் துறையும்
   மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின்
   பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.

10.311   10 st/nd Thirumurai   Song # 48   திருமூலர்   திருமந்திரம்  
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

10.404   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

10.413   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

10.716   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே. 17,

10.801   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

10.836   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே. 37,

10.838   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

10.838   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

10.838   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

10.928   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

11.022   11 st/nd Thirumurai   Song # 99   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் வெய்ய
துணையகலான் நோக்கலான் போற்றிகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.

11.029   11 st/nd Thirumurai   Song # 1   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்
டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற
மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.

12.050   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
12.140   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மெய்யன்பர் மனத்தன்பின்
விளைத்தஇசைக் குழலோசை
வையந்தன் னையும்நிறைத்து
வானந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத
பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின்
அருகணையப் பெருகியதால்.
12.190   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப்
பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால்
நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.
12.210   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில்
தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன்
போதும்பிணி விட்டரு ளிப்பொருளா
எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங்
கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
12.260   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.
12.280   12 st/nd Thirumurai   Song # 102   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 213   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.
12.280   12 st/nd Thirumurai   Song # 495   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 177   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே
சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறும் சென்றிரப்பார்.
12.540   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மெய்த்தவரைக் கண்டிருக்கும்
வேல்மன்னர் வினவுதலும்
அத்தன்அடி யாரையான்
அமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தேனென்று
இயம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட்டு இவரன்றோ
பண்டாரம் எனக்கென்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list