சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மைத்
மைத்     மைத்தடங்     மைத்த     மைத்தழை    
1.100   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்-
பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச்
சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் சிவன் என்று
நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

2.049   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும்
கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி
அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்!
உன கழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!

3.085   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.

3.113   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை
சேர்வதும்; மா சு(ண்)ணமே
மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர், மேல் மதியே;
பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது, மத்தம் அதே;
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர்,
வெங்குருவே.

8.212   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மைத்தழை யாநின்ற மாமிடற்
   றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
   போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
   வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
   பாவம் பெரியவரே.

12.080   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மைத்தடங் குன்று போலும்
மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது
வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன்
அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன்
என்கொலோ பிழையென் றஞ்சி.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list