1.053
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை, பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்......
|
1.066
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக் கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால், சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.
|
1.093
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா! என வல்லார் பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.
|
1.102
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக் கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே! ஐயா! என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.
|
3.099
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே;
பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார்
நைவு இலர்; நாள்தொறும் நலமே.
|
7.065
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு ஒத்த பொன் மணிக் கலசங்கள் ஏந்தி, ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப, பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்- சித்தர், வானவர், தானவர், வணங்கும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .
|
8.107
8 st/nd Thirumurai
Song # 11
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி,
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல்
செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமை' ஏல் ஓர் எம்பாவாய்!
|
8.125
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த
குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ!
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ!
அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
|
8.218
8 st/nd Thirumurai
Song # 12
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மொய்யென் பதேஇழை கொண்டவ னென்னைத்தன் மொய்கழற்காட் செய்யென் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும் பொய்யென்ப தேகருத் தாயிற் புரிகுழற் பொற்றொடியாய் மெய்யென்ப தேதுமற் றில்லைகொ லாமிவ் வியலிடத்தே.
|
12.000
12 st/nd Thirumurai
Song # 167
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.
|
12.100
12 st/nd Thirumurai
Song # 134
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மொய்காட்டும் இருள்வாங்கி
முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய
வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க
இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக்
கதிர்காட்டி யெழும்பொழுதில்.
|
12.150
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மொய்வைத்த வண்டின் செறிசூழல்
முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர
வந்த மந்த
மெய்வைத்த காலும் தரும்ஞாலம்
அளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி
மணஞ்செய் ஈரம்.
|
12.210
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
மொய்யளிசூழ் நிரைநீல
முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற்
செழுமுகையின் நகஞ்சிறப்ப
மெய்யொளியின் நிழற்காணும்
ஆடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தால்
போலுயர்வ மலர்ச்சோலை.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 181
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 296
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 330
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 361
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.
|