சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வந்து
வந்துநின்     வந்தும்     வந்துதிரு     வந்து     வந்துதிருக்     வந்துற்ற     வந்துற்றெழு     வந்துமுன்     வந்துவளர்     வந்துமணி     வந்து,    
3.109   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

5.071   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!

5.086   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,-
அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்-
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.

7.033   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்!
வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ?
புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.065   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து, வானநாடு நீ ஆள்க! என அருளி,
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மா மணி அணி திருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்-
செந் தண் மா மலர்த் திருமகள் மருவும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

8.143   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார்
பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.

10.928   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

11.029   11 st/nd Thirumurai   Song # 21   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

12.000   12 st/nd Thirumurai   Song # 168   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.
12.030   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 136   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்துதிரு மலையின்கண்
வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும்  
செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும்
கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன்
யார்செய்தார் என்றழிவார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 149   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்துதிருக் காளத்தி  
மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர்  
தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை
முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய
பூசனையின் செயல்முடிப்பார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.
12.150   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 285   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 362   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 211   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 225   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 372   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 541   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1232   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.
12.290   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
12.370   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வந்துமணி மதிற்கருவூர்
மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி
எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார்
மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி
மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list