சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வரி
வரி     வரிந்த     வரிகிடந்     வரிநீல     வரித்தடந்     வரிவளர்பூஞ்     வரிசிலைத்     வரிமயில்     வரிவிற்     வரிஞ்சை     வரிய     வரிமுரி     வரிப்     வரிசேர்    
1.019   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்  கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.

1.070   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும்
பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

1.078   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

1.119   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி ஆய மலரானும் வையம் தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,
பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.

1.120   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,
அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

2.001   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?

2.045   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக.
எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்.
பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.

2.063   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.

2.080   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

3.030   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும்
எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர்,
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.032   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.

3.084   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.

3.093   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர் உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து, பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

4.025   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.

5.041   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி-
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.

7.014   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்,
புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகிப்
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.099   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக,
அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?-
விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து
திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.211   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
   மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
   ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
   பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
   னொருவனித் தேம்புனமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 182   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய

11.022   11 st/nd Thirumurai   Song # 53   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.

11.032   11 st/nd Thirumurai   Song # 44   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.

12.000   12 st/nd Thirumurai   Song # 218   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வரிவளர்பூஞ் சோலைசூழ்
மடத்தின்கண் வன்றொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட
வீரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப்
புடையெங்கு மிடைகின்ற
பரிசனமுந் துயில்கொள்ளப்
பள்ளியமர்ந் தருளினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 603   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வரிசிலைத் தென்ன வன்தான்
உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப்
பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங்
குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச்
சைவம்அங் கெய்தா தாக.
12.280   12 st/nd Thirumurai   Song # 1106   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வரிமயில் அனைய சாயல்
மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச்
செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப்
பொலிந்தொளி விளங்கிப் பொங்க.
12.410   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
12.460   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list