சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வரை
வரை     வரையிடை     வரைத்து     வரையெடுத்த     வரையொன்று     வரைகொண்ட     வரையுறை     வரைவளர்மா     வரையோடு     வரைத்தலைப்     வரைத்தலம்(ம்)     வரைக்குல     வரைத்தலம்     வரைகள்     வரைகிலேன்,     வரைக்கண்     வரையின்     வரைக்கை     வரையன்    
1.019   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.

1.025   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

1.036   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

1.072   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும்
விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம் பத்தும்,
உரை ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே.

1.125   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர்கதியினரே.

2.022   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)
வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

2.035   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.

2.088   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும்
இற்று நெரிய,
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன்;
எங்கள் அரன்; ஊர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால்,
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திரு முல்லை
வாயில் இதுவே.

2.098   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி
வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
வல்லமே??

2.101   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும்
நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

2.110   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
தாமே.

3.008   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே,
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.020   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள
விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,
பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.

3.029   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே

3.033   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே.

3.036   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே,
திரை தரு முகலியின் கரையினில், தேமலர்
விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே!

3.075   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி உடை
அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்,
தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன
சண்பைநகரே.

3.079   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற,
விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல்
குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே.

4.061   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை
விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்-
திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.

4.067   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

5.019   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

5.024   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

5.053   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

6.047   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம்
உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே?
கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

6.086   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை; வானவர்க்கும் வானவனை; மணியை; முத்தை;
அரை ஆர்ந்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை; தம்மானை, அடியார்க்கு என்றும்;
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னை; ந்துருத்தி மேயானை; புகலூரானை;
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

7.042   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து   இறைஞ்ச,
திரை ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை      மேல்
நிரை ஆர் கமுகும், நெடுந் தாள்-தெங்கும், குறுந் தாள் பலவும், விரவிக் குளிரும்
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

7.074   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும், வணக்கியும், மராமரம் பொருது,
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், காம்(பு) பீலி சுமந்து, ஒளிர் நித்திலம் கை   போய்,
விரையும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்   நாயேன்
உரையும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை .

7.101   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வரைக்கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டு ஆனால் மனைதோறும்
இரக்கை ஒழியீர்; பழி அறியில், ஏற்றை விற்று நெல் கொள்வீர்!-
முரைக் கை பவளக்கால் காட்ட, மூரிச் சங்கத்தொடு முத்தம்
திரைக் கை காட்டும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

8.214   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

10.117   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 18,

10.707   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

11.016   11 st/nd Thirumurai   Song # 16   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த

11.026   11 st/nd Thirumurai   Song # 12   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்
கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ
தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ
டுலகு குழைத் தொரு நாள் உண்டதும்

உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்

தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய

பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்

கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது
கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை

மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்
செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே

11.034   11 st/nd Thirumurai   Song # 20   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.

12.100   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வரையுறை கடவுட் காப்பும்
மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக்
கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி
வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி
அழகுற வளர்க்கும் நாளில்.
12.210   12 st/nd Thirumurai   Song # 332   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வரைவளர்மா மயிலென்ன
மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித்
துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த்
திருவொற்றி யூர்சேர்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 147   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வரையோடு நிகர்புரிசை
வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக்
கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப
மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந்
திருச்சாய்க்கா டெய்தினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list