சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வல்
வல்லி     வல்லியந்தோல்     வல்லவன்     வல்லார்கள்     வல்வகையால்உம்     வல்லையேற்     வல்லாண்     வல்அமண்     வல்அமணர்     வல்     வல்லை     வல்லாடி     வல்லம்     வல்லராய்     வல்லது     வல்-நாகம்     வல்சியி    
1.075   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.105   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்,
அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

2.075   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே.

2.101   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.

3.069   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.

3.125   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.

4.085   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!

5.032   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும்-பூந்துருத்தி(ந்) நகர்ச்
செல்வன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

6.045   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார்,
எல்லை எம்பெருமானைக் காணோம் என்ன, எவ் ஆற்றால் எவ்வகையால் காணமாட்டார்;
நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, நாம் இருக்கும் ஊர் பணியீர், அடிகேள்! என்ன,
ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.

7.005   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

7.051   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி,
தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை,
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

8.110   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே,
கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட,
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.128   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை
வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

8.217   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வல்சியி னெண்கு வளர்புற்
   றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
   பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
   வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
   பவர்ப்பெறிற் கார்மயிலே.

10.101   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 

10.224   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.25,

12.000   12 st/nd Thirumurai   Song # 191   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வல்லையேற் காட்டிங் கென்ன
மறையவன் வலிசெய் யாமற்
சொல்லநீர் வல்லீ ராகில்
காட்டுவே னென்று சொல்லச்
செல்வநான் மறையோர் நாங்கள்
தீங்குற வொட்டோ மென்றார்
அல்லல்தீர்த் தாள நின்றார்
ஆவணங் கொண்டு சென்றார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வல்லாண் மையின்வண் டமிழ்நாடு
வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின்
நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறமேவிய
நீற்றின் சார்பு
செல்லா தருகந்தர் திறத்தினில்
சிந்தை தாழ்ந்தான்.
12.210   12 st/nd Thirumurai   Song # 219   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வல்அமண் குண்டர்தம் மாயை
கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனுங்களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறஞ்
சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுதுரை செய்தணைவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 399   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வல்அமணர் தமைவாதில்
வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும்
தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு
வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார்
தூயபுகழ் வாகீசர்.
12.320   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வல்லார்கள் தமைவென்று
சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர்
அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம்
மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி
மாறர்திறஞ் சொல்லுவாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list