சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வான
வானில்     வான்     வானத்து     வானப்     வானின்     வானவர்     வானகம்     வானத்தான்     வானநீர்     வான     வானவர்கள்     வானம்     வானோர்     வானிற்     வானுற     வான்அ     வானிறைந்த     வானகமின்     வானள     வானுயர்     வானாகி     வானை     வானக்     வானி     வானே!     வானோர்,     வானைக்     வான்,     வானமதியமும்     வானனை(ம்),     வானம்,     வானவர்க்கு     வானவனாய்     வானத்தார்     வானவனை,     வானகத்தில்     வானவன்     வானோர்க்கு     வானகத்து     வானவன்,     வானுழை     வான்றோய்     வானக்கடிமதில்    
1.014   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

1.070   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

1.109   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் அமர் மதியொடு மத்தம் சூடித்
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மடமயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

1.120   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.

2.008   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

2.020   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், எம்
மானே! என, மா மடம் மன்னினையே.

2.037   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

2.068   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

2.112   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே.

3.020   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு
தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை,
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,
ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.

3.042   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைக்
கூன் ஆர் திங்கள் சூடி, ஒர் ஆடல் மேய கொள்கையான்-
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்;
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே!

3.044   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.

3.053   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.

3.055   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

3.069   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.

3.105   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் இடை வாள்மதி மாடம் தீண்ட, மருங்கே கடல் ஓதம்
கான் இடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்,
ஆன் இடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த,
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே
நினைவோமே.

3.107   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும்
ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது இன்றி,
நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர் எந்தை,
கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.

3.112   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.

4.006   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

4.037   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ,
தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்;
தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே!

4.038   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

4.053   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்,
ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்-
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.

4.092   4 st/nd Thirumurai   Song # 14   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

4.093   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.

4.093   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.

4.095   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

4.112   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

5.004   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.044   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

5.080   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

6.019   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.038   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை   மன்னி இருந்தாய், நீயே;
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

6.041   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,   வானக் கயிலாயன் நீயே என்றும்,
கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில் வீரட்டன் நீயே என்றும்,
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர்   ஆரூராய் நீயே என்றும்,
தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6.044   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி   சேர் வானோர் பெருமான், நீயே;
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய அரணங்கள் மூன்று அட்டானே!
தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும்
தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.050   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை குளமும் மறைக்காடும் மன்னினானை,
ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற
கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர் சடையானை, கலந்தார்க்கு என்றும்
தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

6.055   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி!
வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.060   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை, செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக்
கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை, குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல
கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

6.080   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானகத்தில் வளர் முகிலை, மதியம் தன்னை, வணங்குவார் மனத்தானை, வடிவு ஆர் பொன்னை,
ஊன் அகத்தில் உறுதுணையை, உலவாதானை, ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றை,
கானகத்துக் கருங்களிற்றை, காளத்தி(ய்)யை, கருதுவார் கருத்தானை, கருவை, மூலத்
தேன் அகத்தில் இன்சுவையை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

6.082   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

6.087   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்; வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன் காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்;   கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

6.089   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்;
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்;
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்   பெரியார் இல்லை போலும்;
ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

6.090   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வானவனை, வலி வலமும் மறைக்காட்டானை, மதி சூடும் பெருமானை, மறையோன் தன்னை,
ஏனவனை, இமவான் தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை, ஏத்துவார்க்குத்
தேனவனை, தித்திக்கும் பெருமான் தன்னை, தீது இலா மறையவனை, தேவர் போற்றும்
கானவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

7.070   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே!
ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே!
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
ஆனையே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7.097   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்;
ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு
ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்;
நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

8.104   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
தோழா, போற்றி! துணைவா, போற்றி!

8.104   8 st/nd Thirumurai   Song # 28   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

8.105.02   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

8.105.10   8 st/nd Thirumurai   Song # 95   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ,
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா,
ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா,
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே!

8.108   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வான் வந்த தேவர்களும்,| மால், அயனோடு,| இந்திரனும்,
கான் நின்று வற்றியும்,| புற்று எழுந்தும்,| காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் |தாய்போல் |தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், |உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் |தெளிவின் |ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே |பாடுதும் காண்; |அம்மானாய்!

8.111   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வான் கெட்டு | மாருதம் | மாய்ந்து, அழல், நீர், | மண், கெடினும்,
தான் கெட்டல் | இன்றி, | சலிப்பு அறியாத் | தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, | உயிர் கெட்டு, | உணர்வு கெட்டு, என் | உள்ளமும் போய்,
நான் கெட்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.113   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!

8.134   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே,
ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்;
தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்!
நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?

8.213   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

8.217   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வான்றோய் பொழிலெழின் மாங்கனி
   மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
   டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
   யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
   போலும் வரிவளையே. 9;

8.224   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வானக்கடிமதில் தில்லையெங்
   கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
   ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
   கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
   இனிச்சென்று தேர்பொருளே.

9.023   9 st/nd Thirumurai   Song # 9   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
வான நாடுடை மைந்தனே யோஎன்பன்
   வந்தருளாய் என்பன்
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
   பால்வண்ண னேஎன்பன்
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
   திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண் அணி மார்பனே
   எனக்கருள் புரியாயே. 

9.024   9 st/nd Thirumurai   Song # 11   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
வானோர் பணிய மண்ணோர் ஏத்த
   மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
   சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
   சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
   பாவம் நாசமே. 

9.027   9 st/nd Thirumurai   Song # 1   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
வானவர்கள் வேண்ட
   வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
   ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந்
   தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே
   நாடகமே யாடுவரே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 53   திருமூலர்   திருமந்திரம்  
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

10.841   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.

10.920   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

10.928   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 6   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.

11.006   11 st/nd Thirumurai   Song # 12   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 60   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா

11.010   11 st/nd Thirumurai   Song # 68   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் தானங்
கிருந்துயரக் கைநாட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.

11.016   11 st/nd Thirumurai   Song # 18   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக்

11.021   11 st/nd Thirumurai   Song # 9   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

11.026   11 st/nd Thirumurai   Song # 33   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே மாநாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.

11.031   11 st/nd Thirumurai   Song # 16   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்
றுரைப்பரிவ் வையகத்தே.

12.000   12 st/nd Thirumurai   Song # 257   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வானுற நீள்திரு வாயில் நோக்கி
மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித்
தேனுறை கற்பக வாச மாலைத்
தேவா சிரியன் தொழுதி றைஞ்சி
ஊனு முயிரும் உருக்கு மன்பால்
உச்சி குவித்த செங்கைக ளோடும்
தூநறுங் கொன்றை யான்மூலட் டானம்
சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வானவர் பூவின் மாரி
பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற
நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்
டுடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும்
வானிடை யின்பம் பெற்றார்.
12.170   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வான்அ ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீ
தேன்அ ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை
ஆன்அ ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர்
தான்அ ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.
12.190   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 419   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வானகமின் னுக்கொடிகள்
வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில்
தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும்
கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி
பரப்பிஇசை பாடுவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 428   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வானவர்கள் மலர்மாரி
மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே
ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம்
உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற்
சதயமாந் திருநாளில்.

12.280   12 st/nd Thirumurai   Song # 122   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.
12.280   12 st/nd Thirumurai   Song # 182   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 499   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வானுயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும்
தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப்
பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத்
திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 563   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 203   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வானை அளக்குங் கோபுரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக
உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 354   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.
12.410   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வானி லாவு கருங்கொடி
மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம்
ஆன வூணொ டெழுந்தவே.
12.720   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
வான நாடர்கள் அரிஅயன்
முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள்
ளானையுங் கொண்டுவன் தொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ்

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list