சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வாய்
வாய்ந்த     வாய்திற     வாய்ந்தறிந்     வாய்நாசி     வாய்த்த     வாய்ந்தநீர்     வாய்ந்தசீர்     வாய்மை     வாய்     வாய்த்தது    
1.120   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

2.031   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

2.073   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி இறை
கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய
மிக்க(அ)யன் ஊர், அமரர்கோன் ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குரு அது அரன் நாளும்
அமரும் ஊரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.

3.037   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும் என்று ஓதுவார்க்கு அருள்-தன்மையே!

3.116   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம் இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு அதே.

4.081   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்!
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?

5.058   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா
ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.

7.017   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து;
தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்,
வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

10.307   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே. 

10.829   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.

10.836   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

11.023   11 st/nd Thirumurai   Song # 33   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.

12.110   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வாய்ந்தநீர் வளத்தா லோங்கி
மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும்
எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு
தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி
யிருப்பது கடவூ ராகும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 131   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.


12.210   12 st/nd Thirumurai   Song # 263   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list