சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வாள
வாள்     வாள்கொடுத்     வாளைக்     வாளா     வாளொடு     வாளின்     வாளியுந்     வாளரவு     வாள்விடு     வாளையும்     வாளி     வாள்வரி     வாளினான்,     வாள     வாள்முக,     வாளை     வாளாமால்    
1.043   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

1.090   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து
ஆணி நன்பொனைக் காணுமின்களே!

1.133   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

2.042   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன்
மடந்தை
தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில்
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

2.053   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவு ஆர் பனங்காட்டூர்,
பூளையும் நறுங் கொன்றையும் மதமத்தமும் புனைவாய்! கழல் இணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே!

2.078   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின்
வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு
உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே.

2.085   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

3.002   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

3.026   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.

3.068   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.

3.104   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள்முக, வார்குழல், வாள்நெடுங்கண், வளைத் தோள், மாது அஞ்ச,
நீள் முகம் ஆகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து,
நாண் முகம் காட்டி, நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.

4.055   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று,
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.

7.059   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்;
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி;
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

7.078   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி,
ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே;
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!

7.087   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர்,
தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை
ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.

8.109   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்!' என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

8.135   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;
தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,
தாள தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும்
ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

9.021   9 st/nd Thirumurai   Song # 9   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய
   மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத்
   தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன்
   தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே. 

10.208   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

11.002   11 st/nd Thirumurai   Song # 17   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1  
வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 12   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கோளர்கொல் அந்தோ கிறிப்பட்டார் கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

12.030   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வாளொடு பலகை யேந்தி
வந்தெதிர் வணங்கி மிக்க
ஆளரி யேறு போல்வார்
அவரைமுன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே யாகப்
போயினார் துன்னி னாரை
நீளிடைப் படமுன் கூடி
நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வாளொடு நீள்கை துடித்தன
மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன
தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார்கழ லிற்றன
தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர்
நாடிய போர்செய் களத்தினில்.
12.100   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வாளியுந் தெரிந்து கொண்டிம்
மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார்
உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள
விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல்
நெடிதிடை நேடிச் சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 474   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1213   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வாள்விடு வயிரக் கட்டு
மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின்
தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு
நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண்
சுந்தரத் தோள்மேற் சாத்தி.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list