சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விண்
விண்     விண்ட     விண்தான்     விண்ணோர்     விண்ணவருக்கு     விண்டு     விண்ணுலகு     விண்ணவர்     விண்டலர்     விண்ணின்     விண்ணினின்     விண்ணமர்     விண்ணினைச்     விண்ணவராலும்     விண்ணினுள்     விண்ணவ     விண்ணார்     விண்ணுதல்     விண்ணிடை     விண்பயில்     விண்ணவர்கள்     விண்ணிறைந்த     விண்ணினை     விண்தடவு     விண்ணாள்வார்     விண்ணில்     விண்ணானே!     விண்ணவர்கள்வெற்புஅரசு     விண்டார்     விண்களார்     விண்ணர்,     விண்டவர்தம்     விண்ணினார்;     விண்டவர்     விண்ணினார்     விண்ணப்ப     விண்ணுலகின்     விண்ணவனை,     விண்டானே!     விண்ணகத்     விண்ணை     விண்ணிறந்     விண்ணுக்கு     விண்டலை     விண்ணுஞ்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.004   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,
எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை
யுள் நாள்நாளும் உறைவரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

1.073   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,
எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

1.074   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.075   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

1.077   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உலாம் மதியம் சூடினர் எனவும், விரிசடை உள்ளது,
வெள்ளநீர் எனவும்,
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும், பல புகழ் அல்லது
பழி இலர் எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில்
பெற நின்ற
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!
பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா! என வல்லார்க்கு அடையா, வினைதானே.

1.101   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,
நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.

1.108   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ்
வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்;
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.

1.116   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

1.120   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,
எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.

1.127   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

1.136   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர்,
விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்
கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர்,
கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்
பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர்
கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே.

2.002   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

2.007   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை,
அல்லலே.

2.012   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!

2.015   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.

2.028   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உலாம் மதி சூடி, வேதமே
பண் உளார், பரம் ஆய பண்பினர்,
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார், அடியார்க்கு நல்லரே.

2.031   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.

2.033   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.

2.035   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.

2.053   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

2.065   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்;
அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்;
வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம்
அமர்ந்தாரே.

2.075   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

2.091   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

2.101   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை,
மத்தமும்,
இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை
போய்,
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர்
என்பதே.

2.104   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா
விகிர்தனை, விழவு ஆரும்
மண்களார் துதித்து அன்பராய் இன்பு உறும் வள்ளலை,
மருவி, தம்
கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தைப்
பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ்
ஆமே.

2.106   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு
நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,
உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம்
ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது
இருந்தமையாலே.

2.118   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே.

3.011   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.

3.017   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே.

3.025   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே

3.028   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,
எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.

3.037   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.

3.053   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை,
சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்;
அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.

3.067   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.

3.075   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான் மிக உடை
மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை வழுவார்
உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன பதிதான்-
சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே.

3.090   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.

3.094   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே;
சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே.

3.094   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே;
வண்டு அமர் வளர் சடையீர்! உமை வாழ்த்தும் அத்
தொண்டர்கள் துயர், பிணி, இலரே.

3.098   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.

3.104   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,
பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து,
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.

3.107   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரி
பூமலர்க்கொன்றை,
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று
எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்!
நிறைவு ஆமே.

4.011   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!

4.030   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.033   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை-
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.

4.035   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம்,
பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும்
கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த
எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே.

4.043   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

4.072   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

4.074   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

4.111   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்-
தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

4.112   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.

5.001   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.

5.006   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்;
துண்டவெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.

5.007   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ட மா மலர்மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப்
பண்டை வல்வினை நில்லா, பறையுமே.

5.010   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

5.014   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் உளாரும் விரும்பப்படுபவர்;
மண் உளாரும் மதிக்கப்படுபவர்;
எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை
நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.

5.034   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.

5.046   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

5.051   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும்
மண்ணினார் மறவாது, சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.

5.057   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,
மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,-
பண் உளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!

5.066   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத்
திண் திறல் சிலையால் எரி செய்தவன்,
வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.

5.082   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

6.012   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,   வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ்
ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும்
கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்,
மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

6.012   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,   எரி சுடரான், விண்ணும் ஆகி,
பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;
கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

6.014   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

6.019   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை,
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை,
உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,-
தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.022   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை,
பெண்ணானை, ஆணானை, பேடியானை, பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை,
அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை,
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

6.030   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்; வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்;
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்; வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்;
புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப் புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்-
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

6.037   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணோர் தலைவனே! என்றேன், நானே; விளங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே;
எண்ணார் எயில் எரித்தாய்! என்றேன், நானே; ஏகம்பம் மேயானே! என்றேன், நானே;
பண் ஆர் மறை பாடி! என்றேன், நானே; பசுபதீ! பால்நீற்றாய்! என்றேன், நானே;
அண்ணா! ஐயாறனே! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

6.038   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே   திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

6.062   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத- நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்!
எண் ஆரும் புகழானே! உன்னை, எம்மான்! என்று   என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி,
கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும், கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

6.073   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்   கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

6.078   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;   காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை   பதியா உடையார் தாமே;
திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.082   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;   வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்;
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

6.083   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி, வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற
கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

6.090   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விண்ணவனை, மேரு வில்லா உடையான் தன்னை, மெய் ஆகிப் பொய் ஆகி விதி ஆனானை,
பெண்ணவனை, ஆண் அவனை, பித்தன் தன்னை, பிணம்   இடுகாடு உடையானை, பெருந் தக்கோனை,
எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும்
கண்ணவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

7.013   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய,
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர்
அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

7.053   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்;
கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்;
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம்,
பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

7.061   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

7.069   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்!
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே!
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட
பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

7.075   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண்ணின் மா மதி சூடி; விலை இலி கலன் அணி விமலன்;
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன்; பசு உகந்து ஏறி;
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

7.096   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விண்டானே! மேலையார் மேலையார் மேல் ஆய
எண்தானே! எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன்
கண்டானே! கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே!-
அண்டானே! பரவையுள் மண்டளி அம்மானே!

8.108   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை,
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை,
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை,
பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!

8.111   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
விண்ணோர் | முழு முதல்; | பாதாளத் | தார் வித்து;
மண்ணோர் | மருந்து; அயன், | மால், உடைய | வைப்பு; அடியோம்
கண் ஆர, | வந்துநின்றான்; | கருணைக் | கழல் பாடி,
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

8.120   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

8.210   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விண்ணை மடங்க விரிநீர்
   பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
   காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
   பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
   பண்ணிற்றொர் பெண்கொடியே.

8.212   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விண்ணிறந் தார்நிலம் விண்டவ
   ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
   தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
   சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
   தோமன்ன நின்னருளே.

8.214   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
   கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
   தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
   றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
   வாழுங் கருங்குழலே.

8.214   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
   தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
   புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
   லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
   யேற்கொரு வாசகமே.

8.217   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விண்ணுஞ் செலவறி யாவெறி
   யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
   கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
   துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
   நோக்கினள் கார்மயிலே. 9;

9.004   9 st/nd Thirumurai   Song # 10   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
விண்ணவர் மகுட கோடி
   மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
   வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்
   திருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

10.104   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 

10.309   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே. 

10.413   10 st/nd Thirumurai   Song # 78   திருமூலர்   திருமந்திரம்  
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்கண்ணமர் கூபம் கலந்து வருதலால்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

10.503   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list