சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விதி
விதி     விதிவழி     விதித்த     விதியின்     விதியது     விதித்தன     விதிகரந்த     விதிதவறு     விதியானை,     விதியும்     விதியுடை    
1.030   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

2.016   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.

3.048   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.

3.098   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே;
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

8.218   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
விதியுடை யாருண்க வேரி
   விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
   பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
   வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
   கொல்இனி வையகத்தே.

10.101   10 st/nd Thirumurai   Song # 41   திருமூலர்   திருமந்திரம்  
விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 

10.732   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.33,

10.928   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

11.006   11 st/nd Thirumurai   Song # 93   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.

11.021   11 st/nd Thirumurai   Song # 29   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.

12.280   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list