சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விரி
விரி     விரிதரு     விரிந்து     விரிந்த     விரிந்தது     விரித்தபின்     விரிந்திடில்     விரிகின்ற     விரிகடல்     விரிகடல்சூழ்     விரித்தனை,     விரிந்தனை;     விரித்தவன்,     விரித்தார்,     விரித்தானை,     விரிவு     விரித்த     விரிக்கும்,     விரியும்     விரிந்தானை;     விரிசடையாய்!     விரியும்நீ    
1.095   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.

1.122   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

2.030   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

2.030   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
புரிந்தனை; மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

3.023   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

3.062   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.064   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம்
உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு
கணையால்
எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது இறைஞ்சப்
பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

4.007   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

4.008   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.

4.060   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்)
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்;
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே.

4.069   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.

4.073   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.082   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.

4.089   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.

5.021   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரியும் தண் இளவேனில் வெண்பிறை
புரியும் காமனை வேவ, புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!

6.080   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்; வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை
தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

6.086   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரிந்தானை; குவிந்தானை; வேதவித்தை; வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான் தன்னை;
அரிந்தானை, சலந்தரன் தன் உடலம் வேறா; ஆழ்கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானை; பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான், சிலை மலை நாண் ஏற்றி, அம்பு
தெரிந்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

6.099   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா!
விரி பொழில் சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்!
திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே!
திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயாய்!
மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்!
வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும்
புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.006   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .

9.011   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
   வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
   கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
   முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
   பிழைபொறுத் தாண்டபே ரொளியே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. 

10.409   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

10.409   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

10.719   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

10.808   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.

11.006   11 st/nd Thirumurai   Song # 26   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
விரிகின்ற ஞாயிறு போன்ற
மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தாலெந்தை ஒண்பொடியே.

11.007   11 st/nd Thirumurai   Song # 1   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்
டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.

12.120   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
விரிகடல்சூழ் மண்ணுலகில்
விளக்கியஇத் தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாள்
பிள்ளைப்பே றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்கள்
அறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு
மனத்தருளால் வழுத்தினார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list