சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விளங்கு
விளங்கும்     விளங்கு     விளங்குபெருந்     விளங்குந்     விளங்குதிரு    
1.013   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

2.033   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.

2.074   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கு அயன் ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம்,
மேகம் ஏய்க்கும்
இளங் கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி,
புறவம், ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம்,
வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன்(ன்)
உடலம் காய்ந்தோன் ஊரே.

3.094   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய
இளம்பிறை அணி சடையீரே;
இளம்பிறை அணி சடையீர்! உமது இணை அடி
உளம் கொள, உறு பிணி இலரே.

3.111   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர்
மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
ஆசு அறுமே.

10.720   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.

12.210   12 st/nd Thirumurai   Song # 337   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
விளங்குபெருந் திருமுன்றில்
மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள்
ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள்
பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில்
பலநாள்கள் வைகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 230   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
விளங்குதிரு மதிக்குடைக்கீழ்
வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத்
தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா
அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்ப
வுறுவியப்பால் முறுவலிப்பார்.
12.520   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார்
கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில்
உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு
மாறா தளிக்கும் வாய்மையார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list