சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வேட
வேட்கை     வேட     வேடங்     வேட்டவி     வேடனென்     வேடர்தங்     வேடரைக்     வேடம்     வேட்டு     வேடன்     வேடராய்,     வேடு     வேட்களத்து     வேடனாய்    
2.055   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2.062   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

3.108   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

3.114   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
ஆவதும் உ(ம்)மதே.

4.058   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

4.066   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேடு உறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்;
காடு உறு பதியர் போலும்; கடிபுனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும்; தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

5.042   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

5.055   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேடு தங்கிய வேடமும், வெண்தலை-
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்,-
நாது தங்கிய நாரையூரான் நடம்-
ஆடு பைங்கழல், அம்ம அழகிதே!

5.059   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங்
காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்-
மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு
பாடுவார் பெறுவார், பரலோகமே.

6.083   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான், வில் பிடித்து, கொம்பு உடைய ஏனத்தின் பின்,
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள, கொலைப் பகழி உடன் கோத்து கோரப் பூசல்;
ஆடினார், பெருங்கூத்துக் காளி காண; அருமறையோடு ஆறு அங்கம் ஆய்ந்து கொண்டு,
பாடினார், நால்வேதம்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

8.143   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத்
தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய,
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந் நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

10.106   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 

10.116   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 

10.504   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

10.614   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

11.020   11 st/nd Thirumurai   Song # 15   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்து
ஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள்
காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.

11.032   11 st/nd Thirumurai   Song # 21   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே.

12.100   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வேடர்தங் கோமான் நாகன்
வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் 
திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி
யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும்
மறக்குலத் தலைவ ரெல்லாம்.
12.100   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வேடர்தங் கரிய செங்கண்  
வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த  
வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று  
காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ
என்றவர் அடியில் தாழ்ந்தார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 168   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வேடரைக் காணார் தீய
விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும்
நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு
நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு
கதறினார் கண்ணீர் வார.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list