சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வைய
வையகம்,     வையகத்     வையார்     வையகத்தோர்     வைய     வையகம்     வையம்     வையம்நிகழ்     வையனை,     வையவாம்    
1.097   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

2.041   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும்,
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை;
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண்கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே?

4.071   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

5.029   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ஆவடுதண்துறையா! என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

5.035   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வையம் வந்து வணங்கி வலம் கொளும்
ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்;
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.

7.055   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்;
உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .



7.085   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்,
பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே,
கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

8.109   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

9.017   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்
   மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
   விழுமியோன் முன்புபின் பென்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
   நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே. 

10.112   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 

11.029   11 st/nd Thirumurai   Song # 16   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனங்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்ததெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.

11.031   11 st/nd Thirumurai   Song # 17   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.

11.033   11 st/nd Thirumurai   Song # 34   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
வைய மகிழயாம் வாழ
வமணர்வலி தொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்
ஞானசம் பந்தனையே.

12.000   12 st/nd Thirumurai   Song # 238   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப
மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை
அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
திருக்களிற் றுப்படி மருங்கு.
12.150   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 256   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 737   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது
குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திருவால வாயுள் புக்கார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.
12.470   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.
12.530   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
வையகம் நிகழக் காதல்
மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர்
கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர்
இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர்
செய்வினை விளம்ப லுற்றாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list