1.001
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
|
1.001
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம் நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி, முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின் பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம் மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப் போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப் பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த, உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர் மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும் சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக் காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர் ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல் பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி, பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில், குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர் விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும் முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி, உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம் கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள், தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர் பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும் போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக் கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து, மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.
|
1.002
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை, கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து, குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி, ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம், சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக் கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில், மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம் அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த, செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில் வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ; புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த, கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல் வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம் தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி, பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி, அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம் உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும் எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த, உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்! வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.
|
1.003
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக, கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.
|
1.004
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும், பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய் மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள், பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே! எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய் மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப் பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய் மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும் பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப் புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே! எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல் பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே! எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து, பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய் வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய் விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப் பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே! எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய் வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும் புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
|
1.004
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி, புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி, நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்- கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி, பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம் மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி, கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி, உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில், அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும் கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும் பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப் பாங்கரின்வாய், கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே!
|
1.005
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம் களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி, துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக் கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன், பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று, அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.
|
1.005
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக் குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!
|
1.005
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும் கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே!
|
1.005
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும் குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்; அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!
|
1.005
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை, கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்- துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.
|
1.006
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ, மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த, மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய, மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ, மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப, மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து, மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய, மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும் நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல், மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1.006
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும் மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த, சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.
|
1.007
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று, நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த, ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து, நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும் அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும் நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார் அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு, நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி, ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும், நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும், அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய் நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும், நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து, ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி, நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும் அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும், நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர் நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும் அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
|
1.007
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று, நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும் பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.
|
1.008
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள் கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம் விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும் பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும் அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில் பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார், இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம் தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும் ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம் பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப் பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார், வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம் கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி, பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார், ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம் சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க, பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம் கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப் பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன் வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும் கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி, பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட, சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும், பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத் துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1.008
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப் பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல், கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர் தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம் விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை, கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர் புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து, படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர் நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர, மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார் வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான், தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச, கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர் தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன் தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம் விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வயம் உண்ட தவமாலும் அடி காணாது அலமாக்கும், பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல் வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர், தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர் தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார், வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.
|
1.009
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப் பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல், ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார் கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.
|
1.010
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
|
1.010
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி, தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற, ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.
|
1.010
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல், ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.
|
1.010
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம் எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால், முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல் அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.
|
Search limited to first 100